பிரித்தானிய தேர்தலில் மாபெரும் மோசடி: இளம்பெண்ணின் ட்வீட்டால் வெளியான அதிர்ச்சி தகவல்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

கல்லூரி மாணவர்கள் செய்யும் ஒரு மோசடி, தேர்தலில் எத்தகைய எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்னும் ஒரு தேர்தல் மோசடி குறித்த விடயம், இளம்பெண் ஒருவரின் ட்வீட்டால் வெளிவந்துள்ளது.

பல்கலைக்கழகத்தில் பயிலும் Lucy (23), மிகச் சிறந்த ஒரு மாணவி என்பதை அவரது பல்கலைக்கழகத்தில் யாரும் மறுக்கமாட்டார்கள்.

ஆனால், தற்போது அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள ஒரு செய்தி, பிரித்தானியாவில் நடந்து வரும் ஒரு மாபெரும் மோசடியை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. உலகின் பல நாடுகளில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்தவர்களும் உண்டு, தோற்றவர்களும் உண்டு.

அப்படியிருக்கும்போது, நாட்டின் தலையெழுத்தையே மாற்றும் தேர்தலை, விளையாட்டாக கருதி, மாணவர்கள் விளையாடியுள்ள சம்பவம் வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது. அதுவே இந்த தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தையும் அச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

சரி, விடயத்திற்கு வருவோம், Lucy ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தி இதுதான்... ’வாக்குப்பதிவு செய்வதற்காக இப்போதுதான் எனது வீட்டு முகவரியிலிருந்தும், பல்கலைக்கழக முகவரியிலிருந்தும் பதிவு செய்துவிட்டு வந்திருக்கிறேன்.

நீங்கள் வீட்டு முகவரியிலிருந்து மட்டும் பதிவு செய்திருந்தால், உங்களுக்கு இன்னொரு முகவரி இருக்குமானால் (மாணவர்களுக்கு பல்கலைக்கழக முகவரியும் உண்டு) அதையும் பதிவு செய்துகொள்ளுங்கள், நீங்கள் இரண்டு முறை வாக்களிக்கலாம். இரு முறை பதிவு செய்யுங்கள், இரு முறை வாக்களியுங்கள், தைரியமாக இருங்கள்...’ இதுதான் Lucyயின் செய்தி.

ஆக, இது இன்று நேற்றல்ல, வெகு காலமாக நடந்து வரும் ஒரு மோசடி. மாணவர்கள் இரண்டு வாக்குகளைச் செலுத்தியிருக்கிறார்கள், அதனால் தேர்தலின் முடிவுகள் எப்படியெல்லாமோ மாறியிருக்க வாய்ப்பும் உள்ளது.

அதைவிட முக்கியம், பிரித்தானியாவில் மீண்டும் தேர்தல் நிகழவிருக்கும் நிலையில், இம்முறையும் இதே முறைகேடு நடக்கலாம்.

தேர்தல் விதிமுறைகளை மீறுவோருக்கு 5000 பவுண்டுகள் அபராதம் உண்டு. ஆனால், Lucyயைப் பொருத்தவரை, அவள் வாழ்வது Bournemouthஇல், படிப்பது Birminghamஇல்.இரண்டும் வெவ்வேறு தொகுதிகள்.

அதனால் அவரை யாரும் சந்தேகப்படப்போவதில்லை. மாணவர்கள் மற்ற மாணவர்கள் மீது எளிதில் தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியும் என்பதால், Lucy, அந்த தவறை தான் செய்வதோடு, மற்ற மாணவர்களையும் அதையே செய்யும்படி உற்சாகப்படுத்தியுள்ளார்.

2017 தேர்தலில் ஜெரமி கார்பினை ஆதரிக்கும் மாணவர்கள் Canterburyயிலும் Lincolnஇலும் குழப்பம் விளைவித்தார்கள், அங்கு கன்சர்வேட்டிவ் கட்சியினர் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பாராதவிதமாக அவர்கள் மண்ணைக் கவ்வினார்கள்.

லேபர் கட்சி வாக்குகளும் கிட்டத்தட்ட இரு மடங்காகியிருந்தன. Lincolnஐப் பொருத்தவரை அங்குள்ள இரண்டு பல்கலைக்கழகங்களில் 18,000 மாணவர்கள் பயில்கிறார்கள்.

ஆக, இப்போது இந்த மாபெரும் தேர்தல் மோசடி வெளியில் வந்தாலும், அடுத்த தேர்தலுக்கு குறுகிய கால இடைவெளியே இருக்கும் நிலையில், அரசு நடவடிக்கை எடுத்தால்கூட, வரும் தேர்தலில் இதே மோசடியை தடுக்க முடியுமா என்பது தெரியவில்லை.

அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்