இலங்கை சுனாமியில் பெற்றோரை இழந்த பிரித்தானிய இளைஞர்கள்: தற்போது அவர்களின் நிலை!

Report Print Arbin Arbin in பிரித்தானியா

இலங்கையை புரட்டிப்போட்ட சுனாமியில் சிக்கி தங்கள் பெற்றோரை இழந்த பிரித்தானிய இளைஞர்கள் இருவர், இலங்கை மற்றும் இந்தியாவில் தங்களைப் போன்று சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கடின உழைப்பாளிகளான கெவின் மற்றும் சாண்ட்ரா தம்பதிகளுக்கு Paul மற்றும் Rob Forkan உள்ளிட்ட ஆறு பிள்ளைகள்.

தங்களின் குட்டி நிறுவனத்தால் போதிய வருவாய் ஈட்ட முடியாமலும், நிம்மதியை தொலைத்தும் ஒருவித நெருக்கடியில் காலம் கடத்தி வந்த கெவின் மற்றும் சாண்ட்ரா தம்பதி திடீரென்று ஒரு நாள் ஒரு முடிவுக்கு வந்தனர்.

அதன்படி 6 மாத காலம் இலங்கை மற்றும் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர்.

கொழும்பில் இருந்து துவங்கலாம் என முதலில் முடிவு செய்த அவர்கள், பின்னர் இந்தியாவின் கோவா மாநிலத்தில் இருந்து தங்கள் பயணத்தை துவங்க முடிவு செய்தனர்.

அதற்காக தங்கள் 6 பிள்ளைகளுடன் பிரித்தானியாவில் இருந்து இந்தியாவின் கோவாவுக்கு குடிபெயர்ந்தனர்.

இந்தியாவில் பல பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்ட இந்த குடும்பம், தங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாத்தை துவங்கினர்.

தொடர்ந்து தங்கள் பயணத்தின் இறுதி நாட்களில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இங்கிருந்து பிரித்தானியாவுக்கு திரும்புவதாக திட்டம், மட்டுமின்றி 2005 மார்ச் மாதத்திற்கு முன்னர் பிரித்தானியாவுக்கு திரும்பி, தங்களின் நிறுவனத்தை மேலும் கொஞ்சம் விரிவு படுத்தவும் திட்டம் தீட்டியுள்ளனர்.

(Image: AFP/Getty Images)

ஆனால் அவர்களின் நம்பிக்கையை 2004 கிறிஸ்துமஸ் தின சுனாமி கலைத்துச் சென்றது.

அதுவே அவர்களின் இறுதி கிறிஸ்துமஸ் என ஒருபோதும் அந்த குடும்பம் கருதியிருந்திருக்காது.

சுனாமி தாக்கியபோது கெவின் மற்றும் சாண்ட்ரா தம்பதி கடற்கரை அருகாமையில் உள்ள விடுதி ஒன்றிலே தங்கியிருந்துள்ளனர்.

(Image: Barcroft)

ஆழிப்பேரலை தாக்கிய நிலையில், சகோதரர்களான Paul மற்றும் Rob நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

ஆனால் தங்களில் பிள்ளைகளை காப்பாற்றும் முடிவில், கெவின் மற்றும் சாண்ட்ரா பேரலையில் சிக்குண்டு அடித்துச் செல்லப்பட்டனர்.

17 மற்றும் 15 வயதுடைய Paul மற்றும் Rob, அதன் பின்னர் எஞ்சிய தங்கள் சகோதரர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

Rob and Paul

மிகுந்த சிரமத்திற்கு பின்னர் அதிர்ஷ்டவசமாக சகோதரர்களை கண்டுபிடித்ததாக கூறும் பவுல், அதன் பின்னர் கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகத்தை நாடியதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது தங்களால் பிறருக்கு உதவ முடியும் என்ற சூழல் உருவானதாக கூறும் Paul மற்றும் Rob சகோதரர்கள்,

இந்த இடைப்பட்ட காலத்தில் தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, லாவோஸ், இந்தியா, நியூசிலாந்து, பிஜி மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று வந்ததாக தெரிவிக்கின்றனர்.

(Image: LEE THOMPSON)

கொழும்பில் உள்ள சிறார் இல்லத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் Paul மற்றும் Rob சகோதரர்கள் செயதளித்துள்ளனர்.

சுனாமி தாக்கிய பத்தாவது ஆண்டு, இலங்கையில் தங்களின் முதல் திட்டத்தை செயல்படுத்தியதாக கூறும் Paul மற்றும் Rob சகோதரர்கள்,

தற்போது சுனாமியால் தங்களைப் போன்று பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கான நான்காவது திட்டத்தை செயல்படுத்தும் முனைப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

(Image: Barcroft)
(Image: Barcroft)

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்