லொறியில் 39 சடலமாக கிடந்த வழக்கில் அதிரடி திருப்பம்: வியட்நாம் கடத்தல் மன்னனுக்கு தொடர்பு.. முக்கிய தகவல்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் 39 பேர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் வியட்நாமை சேர்ந்த கடத்தல் மன்னனுக்கு முக்கிய தொடர்பு இருப்பதை புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ட்ரூங் என்று அழைக்கப்படும் நபர், வியட்நாம் மக்கள் கடத்தல் மோசடியின் முக்கிய சந்தேக நபராக உள்ளார்.

எசெக்ஸில் லொறியின் பின்புறத்தில் 39 புலம்பெயர்ந்தோர் இறந்து கிடந்தை விசாரித்து வரும் பொலிசார், இந்த நடவடிக்கையின் பின்னணியில் உள்ள வியட்நாம் கடத்தல் குழு தலைவன் ட்ரூங் இருப்பதை கண்டறிந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவின் மிகப்பெரிய கொலை விசாரணையில் ஒன்றைத் தீர்ப்பதற்குப் பணியாற்றும் பொலிசார், ட்ரூங் என்று அழைக்கப்படும் வியட்நாமிய நபரை பிடிக்க ஒரு சிறப்பு தனிப்படையை அமைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

அதிகாரிகளின் கூற்றுப்படி, ட்ரூங் வியட்நாமிய மக்கள்-கடத்தல் வர்த்தகத்தில் ஒரு முக்கிய நபராக திகழ்கிறா். நாட்டின் வடக்கில் உள்ள Ha Tinh மற்றும் Nghe An மாகாணங்களில் உலகளாவிய கடத்தல் வளையத்தின் தலைவராக ட்ரூங் செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் நம்புகிறார்கள்.

மேற்கு ஐரோப்பாவில் வேலை தேடும் மற்றும் சிறந்த வாழ்க்கையைத் தேடும் புலம்பெயர்ந்தோரை குறிவைத்ததின் மூலம் ட்ரூங் கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

லொறியில் கண்டெடுக்கப்பட்ட 39 பேரில் 29 பேர் வியட்நாமின் Nghe An மாகாணத்தை சேர்ந்தவர்கள் என கருதப்படுகிறது.

கடத்தப்பட்டவர்களின் குடும்பங்களை அமைதியாக வைத்திருக்க ட்ரூங் அவர்களை அச்சுறுத்தி வருவதாகவும், ஒவ்வொரு நாளும் ட்ரூங்கை பிடிக்கும் நடவடிக்கையில் அவரின் படத்தை உருவாக்கி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்