பிரித்தானியாவை நடுக்கிய சம்பவம்: இளைஞர்கள் இருவரின் புகைப்படம் வெளியானது

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவின் மில்டன் கெய்ன்ஸ் நகரில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட இரு இளைஞர்களின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

மில்டன் கெய்ன்ஸ் நகரில் உள்ள Emerson Valley பகுதியிலேயே பிரித்தானியாவை நடுக்கிய இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

கொல்லப்பட்ட இருவருக்கும் 17 வயது எனவும் அதில் ஒருவரது பெயர் Benjamin Rice எனவும் இன்னொருவர் Dominic Ansah எனவும் நண்பர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்ட இருவரும் விருந்து ஒன்றில் கலந்து கொண்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுமார் 15 முதல் 20 பேர் அந்த விருந்தில் இவர்கள் இருவருடன் கலந்து கொண்டுள்ளனர். அனைவரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர்களே எனவும் கூறப்படுகிறது.

விருந்து நடைபெற்ற குடியிருப்பில் திடீரென்று அத்துமீறி புகுந்த இளைஞர் கும்பல் ஒன்றால் களேபரம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்தே ஒருவர் கொல்லப்பட்டதாகவும், இன்னொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் 17 மற்றும் 23 வயதான இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், உயிருக்கு ஆபத்து இல்லை எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை எந்த கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்த குடியிருப்பின் சுவரிலும் தரையிலும் ரத்தக்கறைகள் காணப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்