சிரியாவில் சிக்கித்தவிக்கும் குழந்தைகளை மீட்க பிரித்தானியா நடவடிக்கை

Report Print Vijay Amburore in பிரித்தானியா

சிரியாவில் சிக்கித் தவிக்கும் குழந்தைகளை திருப்பி அனுப்புவதற்கான முதல் நடவடிக்கைகளை பிரித்தானியா அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இஸ்லாமிய அரசுடன் இணைக்கப்பட்ட பிரித்தானிய பெற்றோரின் குழந்தைகளை, மீண்டும் இங்கிலாந்துக்கு மாற்றுவதற்கான செயல்முறையில், வடகிழக்கு சிரியாவில் உள்ள "பல்வேறு நிறுவனங்களுடன்" அதிகாரிகள் செயல்படுவதாக அரசு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இதில் அடையாளம் காணப்பட்ட வழக்குகளில் பெற்றோரை இழந்த மூன்று குழந்தைகள், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் இருந்து பெற்றோருடன் சிரியாவுக்குச் சென்றதாக நம்பப்படுகிறது.

அவர்கள் குர்திஷ் ஆதிக்கம் செலுத்தும் போராளிகள், சிரிய ஜனநாயகப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் தற்போது ரக்காவில் உள்ளனர்.

அந்த குழந்தைகளை ஈராக்கிற்கு கொண்டு செல்வது, அங்கு எர்பில் நகரத்திலிருந்து பிரித்தானியாவிற்கு விரைவாகவும் பாதுகாப்பாகவும் கொண்டு செல்ல முடியும் என்று குர்திஷ் அதிகாரிகள் மற்றும் பிரித்தானிய தொண்டு நிறுவனங்கள் மதிப்பீடு செய்துள்ளனர். இது குறிப்பாக ஐந்து நாள் யுத்த நிறுத்தத்தின் போது நடைபெற உள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்