திருமணத்துக்காக சேமித்து வைத்த லட்சக்கணக்கான பணத்தை வைத்து தம்பதி செய்த நெகிழ்ச்சி செயல்... குவியும் பாராட்டு

Report Print Raju Raju in பிரித்தானியா

வேல்ஸில் தங்களின் செல்ல வளர்ப்பு நாயின் அறுவை சிகிச்சைக்காக தங்கள் திருமணத்துக்கு சேர்த்து வைத்திருந்த பணத்தை ஒரு தம்பதி செலவழித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரீத் என்ற இளைஞரும், மரியா என்ற இளம் பெண்ணும் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் அடுத்தாண்டு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர்.

இதற்காக அவர்கள் £7,000 பணத்தை சேமித்து வைத்திருந்தனர்.

கரித்துக்கும், மரியாவுக்கும் விலங்குகள் மீது அதிகம் பிரியம் இருந்த பெல்லா மற்றும் லென் என இரண்டு நாய்களை வளர்த்து வந்தனர்.

bristolpost.co.uk

இதில் பெல்லாவுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவர்களிடம் காட்டிய நிலையில் arthritis எனப்படும் கால் மூட்டில் நாய்க்கு பிரச்சனை இருப்பது தெரியவந்தது.

பிறக்கும் போதிலிருந்தே கால்களில் அதற்கு பிரச்சனை இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அறுவை சிகிச்சை செய்து அதிகளவில் பணம் தேவைப்படும் என மருத்துவர்கள் கூறினர்.

இதையடுத்து சிறிதும் யோசிக்காமல் தங்கள் திருமணத்துக்காக சேமித்து வைத்திருந்த £7,000 பணத்தை தங்கள் செல்ல நாய் பெல்லாவின் அறுவைசிகிச்சைக்காக கொடுத்தனர்.

bristolpost.co.uk

இது அவர்கள் உறவினர்கள் பலரை ஆச்சரியத்திலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்திய நிலையில் அவர்களை பாராட்டினார்கள்.

ஏனெனில் செல்லப்பிராணிக்காக தங்கள் வாழ்க்கைக்கு சேர்த்து வைத்த பணத்தை கரீத் மற்றும் மரியா கொடுத்தது தான் அதற்கு காரணம்.

அறுவை சிகிச்சை தற்போது நாய்க்கு முடிந்துள்ளது.

அதே சமயத்தில் மேலும் சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதால் இருவரும் ஓன்லைன் மூலம் நிதி வசூல் செய்து வருகின்றனர்.

bristolpost.co.uk

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்