பிரித்தானிய விமான நிலையத்தில் இலங்கையர் நால்வர் கைது!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

இலங்கையைச் சேர்ந்த நால்வர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய பொலிசார் அறிவித்துள்ளனர்.

அவர்கள் நால்வரும் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

Luton விமான நிலையத்தில் வந்து இறங்கியபோது அவர்கள் நால்வரும், 5 மற்றும் 6ஆம் திகதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் தற்போது ஜாமீனில் விடப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிசார் கைது தொடர்பாக மேலதிக தகவல்கள் எதையும் தரவில்லை.

அவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள் என்பதையும் பொலிசார் தெளிவுபடுத்தவில்லை.

அவர்களது பெயர்களை பொலிசார் வெளியிடவில்லை என்றாலும், அவர்களில் மூவர், 39, 35 மற்றும் 41 வயதுடைய ஆண்கள் என்றும், ஒருவர் 35 வயதுடைய பெண் என்றும் தெரியவந்துள்ளது.

அந்த 35 வயது பெண் ஜாமீனில் விடப்பட்டுள்ள நிலையில், மற்ற மூவரும் தெற்கு லண்டனிலுள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்