பிரித்தானியாவில் கர்ப்பிணி மனைவியை சோதித்து பார்த்த கணவன்...DNA சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நபர்,மரபணு சோதனையில் அவர் தன்னுடைய சகோதரி என்பதை அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தார்.

பிரித்தானியாவை சேர்ந்த 24 வயது இளைஞர், தனது பெயர் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்காமல் ரெட்டிட் என்ற சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், எனக்கும் என் கர்ப்பிணி மனைவிக்கும் ஒருவரே தந்தை என்பதை அறிந்தோம். இதனால் அதை உறுதி செய்ய இருவரும் தனித்தனியாக மரபணு பரிசோதனை செய்தோம்.

அதில் என் மனைவி எனது சகோதரி என்பது தெரியவந்ததால் அதிர்ச்சி அடைந்தேன்.

8 ஆண்டுகளாக காதலித்து வந்த நாங்கள் இருவரும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் செய்து கொண்டோம். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் எங்கள் முதல் குழந்தையை எதிர்பார்க்கிறோம்.

என் அம்மாவும் என் மனைவியின் அம்மாவும் எங்களின் தந்தை பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. அவரும் எங்களுடன் இல்லாததால் தெரியவில்லை. இந்த பிரச்சினையால் பிறக்க போகும் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்ற உங்களின் ஆலோசனை எனக்கு தேவை.

இதை தெரிந்துகொண்ட பிறகும் எங்கள் உணர்வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எங்களை யாரும் பிரிக்க விடமாட்டேன். அவளும் அதை விரும்பமாட்டாள். எங்களுக்கு என்ன நடக்கும்? நாங்கள் என்ன செய்ய வேண்டும்? இதை அப்படியே புதைத்துவிடவா என்று கேட்டிருக்கிறார்.

இதற்கு ஏராளமானோர் பதில் அளித்து அவருக்கு ஆலோசனைகளை வழங்கினர். அதில் ஒருவர், நீங்கள் இன்னும் அன்பு செலுத்துகிறீர்கள் என்றால், ஒன்றாக இருங்கள். குழந்தையை உங்களுடன் வைத்துக்கொள்ள விரும்பினால் வைத்துக்கொள்ளுங்கள். இதுபற்றி யாரிடமும் சொல்லாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதே போன்று தொடர்ந்து அந்த பதிவிற்கு ஆலோசனைகள் சென்று கொண்டிருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...