விசா நிராகரிப்பு... வாழ்க்கையின் பாதி நாட்களை பிரித்தானியாவில் கழித்த இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட துயரம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவின் லிவர்பூல் நகரில் மருத்துவராக பணியாற்றும் இளம்பெண்ணை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற உள்விவகார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது 27 வயதாகும் அந்த இளம் மருத்துவர், தமது வாழ்க்கையின் பாதி நாட்களை பிரித்தானியாவில் செலவிட்டுள்ள நிலையில் தற்போது நாட்டை விட்டு வெளியேற்றப்படும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

Aintree பல்கலைக்கழக மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றும் Mu-Chun Chiang என்பவரே அரசின் புதிய குடிவரவு விதிகளின்படி தற்போது நாடுகடத்தப்பட உள்ளார்.

குறிப்பிட்ட கால அளவுக்குள் அவர் பிரித்தானியாவை விட்டு வெளியேற தாமதித்தால் 6 மாத சிறை தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிர்வாக பிரச்னை காரணமாக அவரது புதிய விசா ஏற்கெனவே உள்விவகார அமைச்சகத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

நாட்டைவிட்டு வெளியேற கேட்டு உள்விவகார அமைச்சகம் அனுப்பிய கடிதம் கிடைத்ததும் என்னால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை என கூறும் மருத்துவர் சியாங்,

மருத்துவதுறையில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இந்த சூழலில், நாட்டை விட்டு வெளியேறுவது என்பது உண்மையில் வருத்தம் தரும் செயல் என அவர் தெரிவித்துள்ளார்.

தைவான் நாட்டவரான மருத்துவர் சியாங் தமது பெற்றோருடன் கடந்த 1997 முதல் 2002 வரை கிளாஸ்கோ நகரில் குடியிருந்து வந்துள்ளார்.

கல்வி கற்கும் பொருட்டு சியாங் கடந்த 2006 ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு வந்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் சியாங்கின் மாணவர்களுக்கான விசா காலாவதியானதும், புதிய விசாவுக்கான அவரது மனுவை கடந்த ஆகஸ்டு மாதம் உள்விவகார அலுவலகம் நிராகரித்துள்ளது.

அதில், புதிய விசாவுக்காக மனு அளிக்கப்பட்ட 90 நாட்களில் மனுதாரரின் வங்கிக்கணக்கில் இருப்புத் தொகை 945 பவுண்டுகளுக்கு கீழே சரியக் கூடாது என புதிய விதிகளை குறிப்பிட்டுள்ளது.

ஆனால் மருத்துவர் சியாங், தமது வங்கிக்கணக்கில் அவர்கள் குறிப்பிடுவதை விட அதிக தொகை இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் அந்த குறிப்பிட்ட கால அளவில் சில நாட்கள் இருப்புத் தொகை சரிவை சந்தித்தது உண்மை தான் எனவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

மீண்டும் தமது புதிய வங்கிக்கணக்கை குறிப்பிட்டு அதில் போதிய தொகை இருப்பதாக சுட்டிக்காட்டியும், மருத்துவர் சியாங்கின் மனுவை ஏற்க மறுத்துள்ளது உள்விவகார அலுவலகம்.

தற்போது நாட்டைவிட்டு வெளியேறவும் அல்லது வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடிதம் கிடைக்கப்பெற்ற நாள் தொடங்கி பிரித்தானியாவில் அவர் பணியாற்ற முடியாது எனவும், எந்த சலுகைகளையும் பெற முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மருத்துவர் சியாங்கின் நண்பர்கள் குழு, அவரை பிரித்தானியாவில் இருந்து வெளியேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர்.

இதுவரை மருத்துவர் சியாங்கை ஆதரித்து, உள்விவகார அலுவலகத்தின் மனிதாபிமானமற்ற செயலை கண்டித்து சுமார் 25,000 பேர் கையெழுத்து கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்