வயிற்று வலியால் துடித்த கர்ப்பிணி பெண்! பிரசவ வலியாக இருக்கும் என நினைத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் பிரசவ வலி என நினைத்த பெண்ணுக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்த நிலையில் தான் இறந்தாலும் தன்னுடைய குழந்தைகளுடன் இருப்பேன் என உருக்கமாக கூறியுள்ளார்.

Hull நகரை சேர்ந்தவர் சரோலேட் நகர்கயி (34). இவருக்கு இசபெல்லா (5), அலெக்சாண்ட்ரா (4) என்ற இரு பிள்ளைகள் இருந்த நிலையில் மீண்டும் கர்ப்பமானார்.

இதையடுத்து கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த சரோலேட்டுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவர்களிடம் சென்ற போது பிரசவம் தொடர்பான வலி தான் எனவும் பயப்பட தேவையில்லை எனவும் கூறினர்.

ஆனால் தொடர்ந்து வலியால் அவதிப்பட்ட அவர் டிசம்பரில் குழந்தை பெற்றெடுத்தார். ஆனாலும் அவருக்கு வயிற்றில் அதிக வலி இருந்து கொண்டது.

பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில் கல்லீரலில் 7 புற்றுநோய் கட்டிகளும் நுரையீரலில் பத்துக்கும் மேற்பட்ட புற்றுநோய் கட்டிகளும் இருப்பது தெரியவந்தது.

தற்போது அமெரிக்காவில் தங்கி நோய்க்கான சிகிச்சையை சரோலேட் எடுத்து வரும் நிலையில் விரைவில் பிரித்தானியாவுக்கு திரும்புவது குறித்து திட்டமிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், என் மரணத்துக்கு மருத்துவர்கள் நாள் குறிக்கவில்லை, ஆனால் ஒரு வருடம் தான் நான் உயிரோடு இருப்பேன் என நினைக்கிறேன்.

என் மூன்று குழந்தைகளை நினைத்தால் தான் எனக்கு கவலையாக உள்ளது.

அவர்களிடம், இந்த உலகத்தை தாண்டி சொர்க்கம் என்ற உலகம் உள்ளது, அது அழகான இடம் என கூறி வருகிறேன்.

எனக்கு ஆன்மீகத்தில் நம்பிக்கை அதிகம், நான் உயிரிழந்துவிட்டால் கூட என் குழந்தைகளுடன் இருப்பேன், அவர்களின் வாழ்க்கையில் அப்போதும் என் தாக்கம் இருக்கும் என நம்புகிறேன் என உருக்கமாக கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்