வாழைப்பழத்தால் பறிபோன பிரித்தானிய இளைஞரின் உயிர்: வெளியான அதிர்ச்சி பின்னணி

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவின் பிரிஸ்டல் பகுதியில் குடியிருந்த இளைஞர் ஒருவர் நண்பர்களுடன் இணைந்து மது அருந்திய நிலையில் தூக்கத்தில் மரணமடைந்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், குறித்த இளைஞரை அவரது நண்பர்கள் நால்வர் இணைந்து குறும்பு செய்ததாகவும், அதில் அவருக்கு வாழைப்பழம் ஊட்டியதாகவும் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பிரிஸ்டல் கிரவுன் நீதிமன்றம், தொடர்புடைய நால்வருக்கும் 18 மாத சமூக ஒழுங்குமுறைக்கு உத்தரவிட்டது.

பிரேத விசாரணை மேற்கொண்ட அதிகாரி இந்த விவகாரம் தொடர்பில் தெரிவிக்கையில், மார்ட்டின் எவன்ஸ்(25) மரணமானது உண்மையில் எவ்வாறு நேர்ந்துள்ளது என்பது தொடர்பில் உறுதியாக கூற முடியவில்லை என்றார்.

கடந்த அக்டோபர் மாதம் 20 ஆம் திகதி இரவு மார்ட்டின் தமது நண்பர்கள் இருவருடன், அவர்களது நண்பர்கல் இருவரின் குடியிருப்புக்கு சென்றுள்ளார்.

இதில் நால்வரும் ஒன்றாக அந்த இரவு முழுவதும் மது அருந்தியுள்ளனர். மொத்தமாக சுமார் 80 பொத்தல்கள் பீர் அருந்தியுள்ளதாக பின்னர் விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில் மார்ட்டினின் நண்பர் ஒருவர் ஆம்புலன்ஸ் சேவைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.

பகல் 9.15 மணியளவில் மார்ட்டின் தூக்கத்திலேயே இறந்துள்ளதாக நண்பர் ஒருவரால் கூறப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், மது அருந்துவதற்கிடையே நண்பர்கள் நால்வராலும் மார்ட்டின் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகியுள்ளார்.

Martyn Evans

அவர் தலை மீது சலவை திராவகத்தை ஊறியதாகவும், வாழைப்பழத்தை அவரை நுகர வைத்ததாகவும், மட்டுமின்றி வலுக்கட்டாயமாக வாழைப்பழத்தை அவரது வாய்க்குள் திருகியதாகவும் அதிகாரிக்கு தெரியவந்தது.

மட்டுமின்றி, எஞ்சிய நண்பர்கள் அனைவரும் தூக்கத்தில் இருந்த நிலையில் மார்ட்டின் பலமுறை வாந்தி எடுத்துள்ளதாகவும், சில வேளையில் அந்த வாந்தியால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் இறந்திருக்க கூடும் என அதிகாரிகள் தரப்பு சந்தேகம் எழுப்பியுள்ளது.

சம்பவம் நடந்த போது, ஒரு நண்பர் மருத்துவ சேவையை நாட முயன்றதாகவும், ஆனால் தூங்கி எழுந்தால் மார்ட்டின் சகஜ நிலைக்கு திரும்புவார் என ஒரு நண்பர் கூறியதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சராசரி அளவை விட மூன்று மடங்கு அவர் மது அருந்தி இருந்தாலும், அவர் மரணத்திற்கு அதுவல்ல காரணம் எனவும் அந்த இளைஞரின் மரண காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை என மருத்துவ குழு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்