கருமுட்டை நீக்கப்பட்டு உயிருக்கு போராடிய இளம்பெண்.. அவர் கருத்தரிக்க வாய்ப்பேயில்லை என்ற நிலையில் நடந்த அதிசயம்

Report Print Raju Raju in பிரித்தானியா
212Shares

பிரித்தானியாவில் இரத்த புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இனி குழந்தையே பிறக்காது என மருத்துவர்கள் கூறிய நிலையில் அவர் கர்ப்பமடைந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

East Sussex-ஐ சேர்ந்தவர் அபி பிளையன் (29). இவருக்கு கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் பரிசோதனையில் Hodgkin's Lymphoma என்ற இரத்த புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அடுத்த இரண்டாண்டுகள் அபிக்கு புற்றுநோய்க்கான chemotherapy மற்றும் radiotherapy சிகிச்சையளிக்கப்பட்டது.

ஏற்கனவே அபிக்கு ஒரு கருமுட்டை குழாய் நீக்கப்பட்ட நிலையில் அவரின் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டதால் இனி அவரால் கருத்தரித்து குழந்தை பெற முடியாது என மருத்துவர்கள் கூறினர்.

மேலும் தொடர் சிகிச்சை எடுக்கவில்லை என்றால் அவர் உயிரிழக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறினார்கள்.

இந்நிலையில் இனி தான் சிகிச்சை எடுத்து கொள்ள போவதில்லை என கடந்தாண்டு செப்டம்பரில் அபி முடிவெடுத்த நிலையில் அவருக்கு மீண்டும் நடத்தப்பட ஸ்கேன் பரிசோதனையில் மருத்துவர்களுக்கு அதிர்ச்சி மற்றும் ஆச்சரியம் ஒன்று சேர காத்திருந்தது.

அதாவது அவருக்கு புற்றுநோய் முற்றிலுமாக குணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் பிராட்லி என்பவரை அபி சந்தித்த நிலையில் அவருடன் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலானது.

இதையடுத்து அடுத்த மூன்று மாதத்தில் அபி கர்ப்பமானார், தற்போது எட்டு மாதங்கள் கர்ப்பமாக இருக்கும் அபிக்கு அக்டோபர் மாதம் குழந்தை பிறக்கவுள்ளது.

இது குறித்து அபி கூறுகையில், எனக்கு குழந்தையே பிறக்காது என கூறிய அதே மருத்துவர்கள் என்னை பரிசோதனை செய்து நான் கர்ப்பமாக இருப்பதாக கூறினார்கள்.

என் இரத்தத்தை விட்டு புற்றுநோய் வெளியேறியது, நான் கர்ப்பமானது என எல்லாமே ஒரு அதிசயமான விடயமாக தான் நான் நினைக்கிறேன்.

நான் கர்ப்பமாக இருப்பதாக முதலில் தெரியவந்த போது அதிர்ச்சியடைந்தேன், பின்னரே அதை நம்பினேன்.

இந்த கர்ப்ப காலத்தில் பல சவால்களை நான் சந்தித்தேன், இந்த காலக்கட்டத்தில் பிராட்லி எனக்கு உறுதுணையாக இருந்ததோடு எங்கள் உறவு மிகவும் நெருக்கமாகவும் உறுதியாகவும் ஆனது என நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்