தண்டனையை எதிர்கொள்ள தயார்... பிரித்தானிய மக்களிடம் கெஞ்சும் ஜிகாதி மணமகள்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா
280Shares

சிரியாவில் குறைந்தபட்சம் உள்ள மூன்று தடுப்பு முகாம்களில் 12க்கும் மேற்பட்ட பிரித்தானிய பெண்கள் மற்றும் குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் சேர்ந்து ஐஎஸ் பயங்கரவாதிகளை இருமுறை திருமணம் செய்துகொண்டவரும், பிரித்தானியாவை சேர்ந்தவருமான டூபா கோண்டலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

25 வயதான அவர் கிழக்கு லண்டனின் வால்டாம்ஸ்டோவில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறி, 2015 ல் சிரியாவில் பயங்கரவாதக் குழுவின் தலைநகரான ரக்காவிற்கு சென்றடைந்தார்.

அங்கு பயங்கரவாதியை திருமணம் செய்துகொண்ட கோண்டல், இஸ்லாமிய அரசு பயங்கரவாதிகளின் கொலைகார செயல்களை இணையத்தில் வெளியிட்டு அவர்களை பற்றி பெருமையாக பேசி வந்தார்.

கோபத்தில் பிரித்தானியாவை ஒரு 'இழிந்த நாடு' என்று அழைத்தார். மேலும், 2015ல் பாரிஸ் தியேட்டர் மீதான பயங்கரவாத தாக்குதலைப் பாராட்டி பதிவிட்டார்.

அங்கிருந்தபடியே இளம்பெண்களை ஊக்குவித்து, ஐ.எஸ் பயங்கரவாதிகளை திருமணம் செய்ய மூளைச்சலவை செய்து வந்தார்.

அவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஐ.எஸ்.ஐ.எஸ் வசமுள்ள பாகுஸிலிருந்து துருக்கிய எல்லைக்கு தப்பிச் செல்ல முயன்றபோது, தடுத்து நிறுத்தப்பட்டு மேற்கு ஆதரவு குர்திஷ் படைகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

உம் முத்தன்னா அல் பிரிட்டானியா என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தும் கோண்டல், ஏப்ரல் மாதம் தனது இரண்டு குழந்தைகளான ஆசியா மற்றும் இப்ராஹிம் ஆகியோருடன் ஐன் இசா தடுப்பு முகாமில் இருந்து வெளியில் தோன்றினார்.

இந்த நிலையில் அவர் ஒரு வெளிப்படையான கடிதத்தில் பிரிட்டிஷ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார், அதில் அவர் தனது குழந்தைகளுடன் திரும்பி வர அனுமதிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில், பிரித்தானிய அரசாங்கம் எங்களை திரும்ப அழைத்துச் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் மாறிவிட்டேன் என்பதை நிரூபிக்க விரும்புகிறேன். சமுதாயத்திற்கு ஒரு சிறந்த தனிநபர் என்பதை உறுதிசெய்வேன்.

நான் செய்த தவறுக்கு பிரித்தானிய நீதிமன்றத்தில் நீதியை எதிர்கொள்ள விரும்புகிறேன். ஆனால் எனது குழந்தைகள் எந்த தவறும் செய்யாத நிரபராதிகள். 18 மாத வயதுடைய ஆசியா, கிட்டத்தட்ட மூன்று வயதான மகன் இப்ராஹிம் போரினால் காயமடைந்துள்ளனர். எனது மன்னிப்பை பிரித்தானியா ஏற்றுக் கொண்டு எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க விரும்புகிறேன்.

'நான் ஒருபோதும் ஐ.எஸ்-ல் உறுப்பினராக இருந்ததில்லை. பல கட்டங்களில் திருமணம் செய்ய நிர்பந்திக்கப்பட்டேன், நான் எத்தனை முறை தப்பிக்க முயற்சித்தேன் என்று சொல்ல முடியாது. ஆரம்பத்தில் இருந்தே வெளியேற விரும்பினேன். ஆனால் அது சாத்தியமற்றது. இந்த குற்றவாளிகள் எனது குழந்தைகளை கொலை செய்வதாக மிரட்டினர் ' என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அவருடைய இந்த கோரிக்கைக்கு பிரித்தானிய அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்