கழுத்தில் கயிறு கட்டி தொங்கவிடப்பட்ட இளம் தாயார்... 3 மணி நேர சித்திரவதை: பிரித்தானிய ராணுவ வீரரின் வெறிச்செயல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
373Shares

பிரித்தானியாவில் குடும்ப தகராறு காரணமாக இளம் தாயாரை அவரது முன்னாள் காதலர் கொடூரமாக சித்திரவதைக்கு உட்படுத்திய வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேற்கு யார்க்ஷயர், காஸில்ஃபோர்ட் பகுதியில் குடியிருக்கும் 24 வயது இளம் தாயார் Bethany Marchant என்பவரே தமது காதலரால் கொடூர சித்திரவதைக்கு உள்ளானவர்.

ராணுவ வீரரான 28 வயது ஸ்டீபன் கார் என்பவரை பெத்தானி கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு மதுபான விடுதியில் வைத்து சந்தித்துள்ளார்.

இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் அக்டோபர் மாதம் முதல் டேட் செய்து வந்துள்ளனர். துவக்கத்தில் தமது காதலிக்காக ஸ்டீபன் பூக்கள் வாங்கி பரிசளிப்பதும், அடிக்கடி இருவரும் ஒன்றாக உணவருந்த வெளியே செல்வதுமாக தங்கள் காதலை கொண்டாடி வந்துள்ளனர்.

ஸ்டீபன் எப்போதும், தம்மை கட்டுப்படுத்த முயன்றதில்லை என கூறும் பெத்தானி, ஒருமுறை கூட எந்த உடை உடுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தியதில்லை என பெத்தானி நினைவு கூர்ந்துள்ளார்.

மட்டுமின்றி ஒருமுறை கூட இருவரும் சின்னதாய் வாக்குவாதத்திலும் ஈடுபட்டதில்லை என்கிறார் அவர்.

ஆனால் சம்பவத்தன்று முதன் முறையாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஸ்டீபன், உன்னை விட அவள் சிறந்தவர் என கூறி ஏளனமாக பேசியுள்ளார்.

இதில் மனமுடைந்த பெத்தானி, தமது வீடுக்கு செல்ல முயன்ற போது ஸ்டீபனின் வேறு முகம் வெளிப்பட்டது என்கிறார் பெத்தானி.

தம்மை குடியிருப்பில் இருந்து வெளியேற விடாமலொ தடுத்தது மட்டுமின்றி, ஒரு அறைக்குள் வைத்து பூட்டியுள்ளார்.

அதன் அடுத்த 3 மணி நேரம் வாழ்க்கையில் முதன் முறையாக மரணத்தை நேரில் பார்த்ததாக பெத்தானி நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தலையணயால் முகத்தில் அமர்த்தி தம்மை கொலை செய்ய முயன்ற ஸ்டீபன், பின்னர் கழுத்தை நெரித்துள்ளார்.

தொடர்ந்து மூச்சு விட திணறிய தம்மை கத்தியை காட்டி மிரட்டி, குழந்தையையும் தம்மையும் கொலை செய்து புதைத்து விடுவதாக மிரட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.

நிர்வாண கோலத்தில் இருந்த ஸ்டீபன், பின்னர் கழுத்தில் கயிறை கட்டி தம்மை தொங்கவிட்டதாக கூறும் பெத்தானி, அவரே சில நிமிடங்களுக்கு பின்னர் அதில் இருந்து மீட்டதாக கூறுகிறார்.

தமது அலறல் சத்தம் கேட்டே அயல் வீட்டார் பொலிசாருக்கு தகவல் அளித்ததாக கூறும் பெத்தானி, சுமார் 4 மணியளவில் பொலிசார் வந்து தம்மை மீட்டதாக கூறியுள்ளார்.

இந்த வழக்கில் மிக முக்கியமான ஆதாரமாக அமைந்தது, ஸ்டீபன் தமது குடியிருப்பின் ஒவ்வொரு மூலையிலும் பொருத்தியிருந்த கண்காணிப்பு கமெராக்களே என பெத்தானி தெரிவித்துள்ளார்.

ஸ்டீபன் பயன்படுத்தியிருந்த வாகனத்தை தற்போது சாலையில் எங்கும் காண நேர்ந்தால் அந்த பதிவு எண்ணையே கவனிக்கிறேன் என பெத்தானி தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், ஸ்டீபனுக்கு 11 ஆண்டுகளும் 3 மாதமும் சிறை தண்டனை விதித்து லீட்ஸ் கிரவுன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்