ராணியின் ஒப்புதல் இல்லாமலே திருமணம் செய்துகொள்ளவிருக்கும் இளவரசி!

Report Print Vijay Amburore in பிரித்தானியா
581Shares

இளவரசி பீட்ரைஸ் இன்று தனது காதலன் எடோர்டோ மாபெல்லி மோஸியுடன் நிச்சயதார்த்தம் செய்ததாகவும், விரைவில் திருமணத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டார்.

கடந்த சில ஆண்டுகளாகவே அரச குடும்பத்தில் இளவரசர் ஹாரி - மேகன், இளவரசி யூஜெனி- ஜாக் ப்ரூக்ஸ் பேங்க் மற்றும் லேடி கேப்ரியெல்லா வின்ட்சர் - டாம் கிங்ஸ்டன் என அடுத்தடுத்து திருமணம் நடைபெற்ற வண்ணமே இருந்து வருகிறது.

சிறப்பு சந்தர்ப்பங்கள், அரச பாரம்பரியம் மற்றும் நெறிமுறைகள் என பல இருந்தாலும், தம்பதியினர் குடும்பத்தில் எவ்வளவு மூத்தவர்கள் என்பதைப் பொறுத்து அவற்றின் முறைகள் மாறுபடுகின்றன.

2011ம் ஆண்டு இளவரசர் வில்லியம், கேத்ரினை திருமணம் செய்வதற்கு ராணியின் அனுமதி பெற்றார். அதேபோல இளவரசர் ஹரி, மேகனை திருமணம் செய்வதற்கும் ராணி அனுமதி வழங்கியிருந்தார்.

ஏனெனில் அந்த சமயத்தில் இருந்த சட்டப்படி ராணி தனது பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகளின் திருமணத்திற்கு அனுமதி கொடுக்க வேண்டியிருந்தது.

ஆனால் 2013ம் ஆண்டு அரச சட்டத்தில் செய்யப்பட்ட மாற்றத்தின் காரணமாக, கிரீடத்திற்கான வரிசையில் முதல் ஆறு பேர் மட்டுமே ராணியின் ஒப்புதலைப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சட்ட திருத்தினால் இளவரசி யூஜினை தொடர்ந்து இளவரசி பீட்ரைஸ் அனுமதி இல்லாமலே திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.

கிரீட வரிசையின்படி, இளவரசர் சார்லஸ் (ஏற்கனவே திருமணமானவர்), இளவரசர் வில்லியம் (ஏற்கனவே திருமணமானவர்) இளவரசர் ஜார்ஜ் (6), இளவரசி சார்லோட் (4) மற்றும் இளவரசர் லூயிஸ் (1). இளவரசர் ஹரி(ஏற்கனவே திருமணமானவர்), குழந்தை ஆர்ச்சி அவர்களை தொடர்ந்து பீட்ரைஸ் ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.

அரச குடும்பத்தை பொறுத்தவரை மேல் உள்ளவர்களுக்கு அதிகாரம் இருந்தாலும் கூட, கீழ் உள்ளவர்களுக்கே அதிக சுதந்திரம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்