ஆணாக மாறியபின் குழந்தை பெற்ற பெண்: தந்தை என்று பதிவு செய்ய நீதிமன்றம் மறுத்ததால் சோகம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
450Shares

பிரித்தானியாவில் பெண்ணாக இருந்து அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிய ஒரு நபர், கருவில் ஒரு குழந்தையை சுமந்து பெற்ற நிலையில், அவரை அந்த குழந்தையின் தந்தை என நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாததால் ஏமாற்றமடைந்துள்ளார். Freddy McConnell (32) பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர்.

உடலின் வெளி உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாற்றியும், அவரது கருப்பை முதலான பெண் உள்ளுறுப்புகள் அகற்றப்படவில்லை.

அதனால், செயற்கை முறையில் கருவுற்ற Freddy, 2018ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.

ஆனால் தனது குழந்தையின் பிறப்பை பதிவு செய்ய அவர் செல்லும்போது, தன்னை குழந்தையின் தந்தை அல்லது பெற்றோர் என பதிவு செய்யுமாறு அவர் கோரியுள்ளார்.

ஆனால், ஆனால் அரசு பதிவாளர், பிரசவிக்கும் நபர் தாய் என்றுதான் பதிவு செய்யப்படுவார் என்று கூறி Freddyயின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவிக்கவே, Freddy நீதிமன்றம் சென்றுள்ளார்.

Freddy சார்பில் வாதிட்ட சட்டத்தரணி, குழந்தையின் நலம் கருதியே அவர் தன்னை குழந்தையின் தந்தை அல்லது பெற்றோர் என பதிவு செய்யவிரும்புவதாக வாதிட்டார்.

ஆனால், இதற்கு முன்பு திருநம்பிகளுக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், அவர்கள் தாய் என்றே பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் மற்றும் பதிவாளர்கள் சார்பில் வாதிடப்பட்டது.

வாதங்களைக் கேட்ட நீதிபதி, Freddyயின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார். ஒரு வேளை, Freddyயின் வழக்கு வெற்றி பெற்றிருந்தால் பிரித்தானிய வரலாற்றிலேயே குழந்தையை பிரசவித்த முதல் தந்தை என்ற பெயரை பெற்றிருப்பார்.

அத்துடன் அவரது குழந்தையும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் வரலாற்றில் சட்டப்படி தாய் என்ற நபர் இல்லாத முதல் குழந்தை என்ற பெயரை பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்