பிறந்த குழந்தையை விட்டுத்தர மறுக்கும் வெளிநாட்டு மருத்துவமனை: தவிக்கும் பிரித்தானிய இளம் தம்பதி

Report Print Arbin Arbin in பிரித்தானியா
468Shares

ஐக்கிய அமீரகத்தின் துபாயில் உள்ள மருத்துவமனையில் இருந்து தங்களின் பிஞ்சு குழந்தையை விட்டுத்தர கோரி பிரித்தானிய இளம் தம்பதி போராடி வருகிறது.

கடந்த ஜூலை மாதம் பிரித்தானியரான அசார்(26) மற்றும் சையதா(23) தம்பதிக்கு 23 வார குறை பிரசவத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

சையதாவை பரிசோதித்த என்.எம்.சி ராயல் மருத்துவமனை மருத்துவர்கள், அவரது பனிக்குடநீர் மிகவும் குறைவாக இருப்பதாகவும் குழந்தையின் இதயத் துடிப்பு மிக அதிகமாகவும் இருப்பதாக எச்சரித்துள்ளனர்.

இந்த சூழலில் குழந்தையை காப்பாற்ற தவறினால், பிள்ளையை இழக்க நேரிடும் என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் எடை மிகவும் குறைவாக பிறந்த அந்த குழந்தையானது என்.எம்.சி ராயல் மருத்துவமனையில் சிறப்பு கண்காணிப்பில் இருந்து வந்தது.

தற்போது மருத்துவ கட்டணமாக £100,000 தொகையை செலுத்தினால் மட்டுமே குழந்தையை விட்டுத் தருவதாக அந்த மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆனால், தற்போதே வேலைக்கு சேர்ந்திருக்கும் தம்மால் அவ்வளவு பெரிய தொகையை மொத்தமாக செலுத்த முடியாது எனவும்,

தவணை முறையில் செலுத்த ஏற்பாடு செய்து தரும்படியும் அசார் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆனால் அந்த மருத்துவமனை நிர்வாகமானது அதற்கு ஒப்புக்கொள்ள மறுத்ததுடன், கட்டணத்தை செலுத்தாமல் பிள்ளையை விட்டுத்தர முடியாது என இறுதியாக தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் விசாவுக்கு கோரியுள்ள சைய்தாவுக்கு அதிகாரிகளின் அலட்சியத்தால் கடைசி கட்டத்தில் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டதால், அரசு மருத்துவ,மனையில் பிரசவ,ம் வைத்துக் கொள்ளும் இந்த இளம் தம்பதிகளின் திட்டம் ஈடேறாமல் போனது.

மட்டுமின்றி மாணவர்களுக்கான விசாவில் சைய்தா தங்கியிருந்ததால் அவரால் மகப்பேறு காப்பீடு பெற முடியாமல் போனது.

இந்த விவகாரத்தில் பிரித்தானியரான அசாரால் எந்த முடிவும் மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மறுபடியும் சைய்தாவுக்கு விசா கோர வேண்டும் என்றால் ஆறு payslip தேவை எனவும், இதனால் அசார் கடும் மன உளைச்சலில் இருப்பதாகவும், இந்த இக்கட்டான சூழலில் அவர் துபாயில் இருக்க முடியாமல் போனது எனவும் சைய்தா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

தற்போது மருத்துவ கட்டணத்தை செலுத்தும் பொருட்டு பொதுமக்களிடம் இருந்து உதவி கோரியுள்ளதாகவும், இதுவரை 15,000 பவுண்டுகள் சேகரித்துள்ளதாகவும் அசார் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி பிரித்தானியாவில் உள்ள தொண்டு நிறுவனங்களில் உதவி கோரியுள்ளதாகவும், ஆனால் இதுவரை சாதகமான எந்த பதிலும் கிடைக்கவில்லை என அசார் கண்கலங்கியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்