குட்டி பெண்ணின் ஹிட் கடிதம் .... 'அனைத்து பல்லையும் வைத்து என்ன செய்யப்போகிறீர்கள்?'

Report Print Abisha in பிரித்தானியா
86Shares

பிரித்தானியாவில் குட்டி பெண் ஒருவர் தனது பெற்றோர் கூறிய கதை பொய் என்று கண்டறிந்து அதற்கு பதில் கடிதம் எழுதியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் குழந்தைகளுக்கு தங்களால் பதிலளிக்க முடியாத கேள்விகளுக்கு எதேனும் குட்டி கதைகள் மூலம் வாயடைக்க பெற்றோர் முயற்சிக்கின்றனர்.

அப்படி பிரித்தானியாவில் 9வயது சிறுமி ஒருவர் தன்னுடைய பெற்றோரிடம் பல்விழும் படலம் பற்றி கேட்டதற்கு அவர்கள், பல்தேவதை வந்து பற்களை கொண்டு செல்கின்றன என்று கதை கூறியுள்ளனர். இதை நம்பாத சிறுமி மனதிலேயே வைத்துள்ளார். இந்நிலையில், அந்த குறிப்பிட்ட சிறுமிக்கு பல் விழும் நேரம் வந்ததும், பல்லை வான தேவதைகள் எடுத்து சென்றுவிட்டு நீ தூங்கும் தலையணைக்கு கீழ் 1பவுண் பணம் வைத்து செல்லும் என்று பெற்றோர் கூறியுள்ளனர்.

அடுத்தநாள் காலையில் எழுந்து சிறுமி பார்த்தபொழுது அதில் ஒரு பவுண்ட் பணம் இருந்ததை கண்டுள்ளார்.

ஆனாலும் அவருக்கு சந்தேகம் விடவில்லை . உடனே தன்னுடைய பெற்றோருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், எனக்கு தெரியும் இது உங்கள் வேலைதான் என்று.... பொய் கூறுவதை நிறுத்துங்கள்!

ஒரு சின்ன அறிவுரை ஒரு பவுண்டுக்கு பதிலாக 100பவுண்ட்கள் வைத்திருந்திருக்கலாம்

இப்படிக்கு

பொய்யர்களை கண்டறியும் மிகச்சிறந்த துப்பறிவாளி!

உங்களுக்கு பிடித்தமான குழந்தை என்று எழுதியுள்ளார்.

பின் குறிப்பில் அனைத்து பல்லையும் வைத்து நீங்கள் என்ன செய்யபோகிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த கடிதம் அவரது தந்தையால் சமூகவலைதள பக்கத்தில் பகிரப்பட்டு அதிகம்பேர் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்