பிரித்தானியாவை பயங்கர புயல்கள் தாக்கும்.. மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்: வானிலை எச்சரிக்கை

Report Print Basu in பிரித்தானியா
307Shares

பிரித்தானியா பிராந்தியங்கள் குறைந்தபட்சம் அடுத்த மாதம் வரை பயங்கர புயல்கள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் என நாட்டின் வானிலை முன்னறிவிப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த சில வாரங்களில் பிரித்தானியா புயல் மற்றும் பலத்த மழையால் பாதிக்கப்படும், அதிக காற்று, மூடுபனி மற்றும் இடி, மின்னல் போன்றவையும் தாக்கும்.

சனிக்கிழமையன்று இன்னும் தீவிரமான வானிலை நாட்டைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செவ்வாயன்று சுற்றுச்சூழல் நிறுவனம் ஏற்கனவே 37 வெள்ள முன்னெச்சரிக்கைகள் மற்றும் நான்கு வெள்ள எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.

வானிலை அலுவலக செய்தித் தொடர்பாளர் Grahame Madge கூறியதாவது, ஞாயிற்றுக்கிழமை மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வருவதற்கு முன்பு, வார இறுதி வரை இந்த அமைதியற்ற வானிலை இருக்கும்.

அடுத்த வாரத்தில் மிகவும் கடுமையான மழை பெய்யும் மற்றும் நாட்டின் சில பகுதிகளில் பலத்த காற்று வீசும்.

ஆனால் பலத்த கற்றும், மழையும் பிரித்தானியாவை அடுத்த மாதத்திற்குள் நொறுங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இது நாடு முழுவதும் மில்லியன் கணக்கானவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 8 வரை, தென்மேற்கில் கடும் மழை மற்றும் பலத்த காற்று இருப்பதாக வானிலை அலுவலகம் எச்சரித்துள்ளது, இது விரைவாக வடக்கு நோக்கி நகர்ந்து நாட்டின் பெரும்பகுதியை தாக்கும், கடற்கரைகள் மற்றும் மலைகளிலும் பலத்த காற்று வீசு வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது..

வானிலை முன்னறிவிப்பாளர் மேலும் கூறியதாவது: தீவிரமான வானிலை அக்டோபர் முதல் வாரத்தில் மீண்டும் தொடங்கும், மேலும் ஈரமான மற்றும் காற்று வீசும் வானிலை முக்கியமாக நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளை பாதிக்கக்கூடும், சில சமயங்களில் புயல்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

அக்டோபர் 9-23 முதல் இரண்டு வார காலத்திற்கு, இந்த காலகட்டத்தில் முன்னறிவிப்பு மீதான நம்பிக்கை குறைவாக உள்ளது என வானிலை அலுவலகம் எச்சரித்தது.

அடுத்த மாதத்தின் நடுப்பகுதியில் வறண்ட வானிலை பரவலாகக் காணப்படலாம், ஆனால் நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகள் பெரும்பாலும் மழை மற்றும் பலத்த காற்றினால் தொடர்ந்து பாதிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் தொடர்ந்து நிலவி வரும் மோசமான காலநிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள், ரயில் சேவை என அனைத்து போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் திட்டமிட்டபடி பயணம் மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்