கறித்துண்டு என நினைத்து குழந்தையை கடித்து குதறி தின்ற நாய்கள்: அடையாளம் தெரியாமல் துடித்த தாய்

Report Print Basu in பிரித்தானியா
389Shares

பிரித்தானியாவில் கடந்த 2016 ஆம் அண்டு தனது உடன்பிறப்பின் குழந்தைக்கு ஏற்பட்ட கொடூர சம்பவத்தை Sandra McKevitt வெளிப்படுத்தியுள்ளார்.

லிவர்பூல், Dingle பகுதியில் உள்ள Sandra வீட்டிலே 2016ஆம் ஆண்டு மே 7ம் திகதி இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட Sandra அன்று நடந்த மறக்க முடியாத சம்பவத்தை பகிர்ந்துள்ளார். சம்பவத்தன்று நான் வீட்டிற்குள் இருந்தேன், என் உடன்பிறப்பின் குழந்தை 2 வயதான Ella வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தால்.

அப்போது, பக்கத்து வீட்டிகாரரின் XL American Bullys நாய்கள் வேலியை தகர்த்துக்கொண்டு, தோட்டதிற்குள் நுழைந்து Ella-வை கறித்துண்டு என நினைத்து கடித்து குதறின.

தோட்டத்தில் நாய்கள் ஓடுவதால் உடனே நான் வெளியே வந்து பார்த்தேன். ஒரு நாய் Ella-வை வாயில் கவ்விக்கொண்டு இருந்தது. மற்ற குழந்தைகள் வீட்டிற்குள் அடைத்து விட்டு, நாய்களிடம் இருந்து குழந்தையை காப்பாற்ற முயன்றேன்.

BBC

ஆனால், அவை குழந்தையை விடுவதாக இல்லை, உதவிக்கு போராடினேன், குழந்தை வலியில் அம்மா, அப்பா என கதறியது, பின்னர் மயக்க நிலைக்கு சென்றுவிட்டார். நாய்கள் குழந்தையின் கால்களை பிடித்து இழுத்தன.

இறுதியில், குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து நாய்களை விரட்டியடித்தனர். இதனையடுத்து, ஏர் ஆம்புலன்ஸ் மூலம் Ella மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார். Ella-வின் தாய்க்கு குழந்தையை அடையாளம் தெரியாமல் போனது. இது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

BBC

குழந்தை உயிர் பிழைக்கமாட்டார் என நான் நினைத்தேன். 12 மணிநேர அறுவை சிகிச்சை, நான்கு வார மருத்துவமனை சிகிச்சைக்கு பின்னர் Ella குணமடைந்தார். எனினும், அவரின் உடலில் ஏற்பட்ட தழும்புகள் மறையாது என நினைத்தோம், தற்போது அனைத்தும் மறைந்துவிட்டது.

Ella இன்னமும் அச்சம்பவத்தினால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு வரவில்லை என Sandra கூறினார். இச்சம்பவத்தை அடுத்து குழந்தையை குதறிய நான்கு நாய்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்