லண்டனில் ஊபர் நிறுவனம் இனி இரண்டு மாதங்கள் மட்டுமே இயங்கும்: வெளியான முக்கிய தகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
815Shares

பிரித்தானிய தலைநகர் லண்டனில் ஊபர் நிறுவனம் செயல்பட மேலும் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளளது.

தொடர்ந்தும் ஊபர் லண்டனில் இயங்க பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் புதிய நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என தெரிக்கப்பட்டுள்ளது.

ஊபர் நிறுவனத்திற்கு மேலும் இரண்டு மாதங்களுக்கு அனுமதி வழங்குவது என்ற தீர்மானத்தை லண்டன் போக்குவரத்து நிறுவனம் இன்று எடுத்துள்ளது.

நிறுவனம் தொடர்பாக மற்றும் லண்டன் மேயரின் விமர்சனங்களை அடுத்தே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

லண்டனில் மட்டும் 45 ஆயிரம் ஊபர் சாரதிகள் உள்ளனர். சாரதிகளின் பின்னணிகளை ஆராயும் போது அவர்களுக்கு எதிராக கடுமையான குற்றச் செயல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது.

2012 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க 2017 ஆம் ஆண்டு ஊபர் முயற்சித்த போது, லண்டன் போக்குவரத்து நிறுவனம் அதனை நிராகரித்திருந்தது. ஊபர் நிறுவனம் இதனை நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தியது.

இதனையடுத்து நீதிமன்ற உத்தரவுக்கு அமைய 15 மாதங்களுக்கான தற்காலிக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டதுடன் அது செப்டம்பர் 25 ஆம் திகதி அதாவது நாளையுடன் முடிவடைகின்றது.

இந்த நிலையில், தொடர்ந்தும் இரண்டு மாதங்கள் இயங்க ஊபருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஊபர் நிறுவனம் மேலதிகமாக மற்றுமொரு அனுமதிப்பத்திரத்திற்கான விண்ணப்பத்தை வழங்க மேலதிக ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஊபர் நிர்வாகம், கடந்த 2 ஆண்டுகளாக பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கவனம் செலுத்தி வந்துள்ளதாகவும், சாரதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கைகள் மேற்கொண்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், லண்டன் போக்குவரது நிறுவனம் கோரும் எந்த ஆவணங்களையும் எதிர்காலத்தில் சமர்ப்பிக்க தாங்கள் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்