அம்மா எப்ப வருவாங்க...! தாய் இறந்ததை கூற முடியாமல் குழந்தைகளை வளர்க்க போராடும் தந்தை

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த ஜாக் என்பவர் கடந்த 2007ம் ஆண்டு செரில் ஹார்டி (31) என்பவரை சந்தித்து திருமணம் செய்துகொண்டார்.

தம்பதியினரின் 11 வருட வாழ்க்கையில் ரியானா (11), அமிரா (10), கமீல் (9), கேசர் முல்லா (7) மற்றும் லயலா (5) என ஐந்து அழகான குழந்தைகளை பெற்றெடுத்தனர்.

ஆனால் இதில் துரதிஷ்டவசமாக லயலா பிறந்து 7 வாரங்கள் மட்டுமே ஆகியிருந்த நிலையில், திடீரென செரில் ஹார்டி வீட்டில் இறந்துகிடந்துள்ளார்.

தாய் சுயநினைவில்லாமல் கிடப்பதை பார்த்த ரியானா உடனடியாக தன்னுடைய தந்தைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜாக், கதறி அழுதுள்ளார்.

இந்த நிலையில் இதுகுறித்து கூறியுள்ள ஜாக், மனைவி இறந்த மூன்று வாரங்களுக்கு நான் யாரிடமும் பேசவில்லை. தனிமையிலேயே இருந்தேன். வீட்டைவிட்டு வெளியேறி யார் கண்ணிலும் படாதவாறு இருந்தேன்.

அதன்பிறகு தான் என்னுடைய ஐந்து குழந்தைகளின் ஞாபகம் எனக்கு வந்தது. அவர்களை எவ்வளவு கஷ்டப்பட்டாலும் நன்கு வளர்க்க வேண்டும் என முடிவெடுத்தேன்.

அப்படி இருந்தும் கூட என்னால் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. என்னுடைய குழந்தைகள் சிரிக்குமாறு என்னிடம் பலமுறை கேட்பார்கள். அவர்களுக்காக நான் சிறிது சிறிதாக மாற்றிக்கொண்டேன்.

யூடியூப் தளத்தில் பார்த்து தான் மகள்களுக்கு தலைமுடி பிண்ணி விடுகிறேன்.

என்னுடைய இளைய மகள், அம்மா எங்கே? என அடிக்கடி கேட்பாள். எனக்கு பதில் கூற தெரியாது. நல்ல ஒரு இடத்தில் இருப்பதாக மட்டுமே கூறியுள்ளேன். அம்மாவை போல நீங்களும் விட்டு சென்றுவிடாதீர்கள் என என்னிடம் கேட்பாள்.

தாய் இறந்ததை பற்றி அவர்களிடம் கூட வேண்டாம் என என்னை சுற்றிலும் உள்ள உறவினர்களிடமும் கூறியுள்ளேன். குழந்தைகள் வளர்ந்த பிறகு எப்பொழுது தெரிந்துகொள்ள வேண்டுமோ, அப்போது தெரிந்துகொள்வார்கள்.

இப்பொது கூறி அவர்களுக்கு மனஅழுத்தத்தை கொடுக்க நான் விரும்பவில்லை என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்