பொம்மையை தவறவிட்ட அவுஸ்திரேலிய குழந்தை: பத்திரமாக குழந்தையிடம் சேர்த்த பிரித்தானியா மகாராணியார்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பக்கிங்காம் அரண்மனைக்கு வந்திருந்த அவுஸ்திரேலிய குழந்தை ஒன்று, தனது பேவரைட் பொம்மையை தவறவிட்டுச் செல்ல, தகவலறிந்து அதை பத்திரமாக திருப்பி அனுப்பியுள்ளார் பிரித்தானிய மகாராணியார்.

Savannah Hart என்ற ஐந்து வயது குழந்தை, அவுஸ்திரேலியாவிலிருந்து பக்கிங்காம் அரண்மனைக்கு வந்திருந்தபோது, தான் எப்போதும் கட்டியணைத்து தூங்கும் தனக்கு விருப்பமான Harriet என்னும் பொம்மையை தவறவிட்டுச் சென்றிருக்கிறாள்.

விடயமறிந்த Savannahவின் பள்ளி ஆசிரியைகள், பிரித்தானிய மகாராணியாருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

மிகவும் பணிவுடனும், மரியாதையுடனும் Savannah தனது பொம்மையை தவறவிட்டுச் சென்ற விடயத்தை குறிப்பிட்டு, அந்த பொம்மையுடன் Savannah உலகம் முழுவதும் சுற்றும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இணைத்து, அவளது பொம்மையை கண்டுபிடித்துத் தருமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தார்கள் அவர்கள்.

ஆச்சரியப்படும் விதமாக, அடுத்த வாரமே மகாராணியாரின் அரண்மனையிலிருந்து அவர்களுக்கு ஒரு பதில் வந்தது.

Harriet பத்திரமாக இருப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததோடு, மகாராணியாரின் அரண்மனை முழுவதும் அந்த பொம்மை சுற்றிவரும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் அந்த கடிதத்துடன் இணைக்கப்பட்டிருந்ததைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கிப்போனார்கள் Savannahவின் ஆசிரியைகள்.

பிறகு Harriet அவுஸ்திரேலியாவுக்கு பத்திரமாக திருப்பி அனுப்பப்பட்டது, தனியாக அல்ல, அத்துடன் Rex என்ற ஒரு நாய்க்குட்டி பொம்மை ஒன்றையும் சேர்த்து மகாராணியாரின் அரண்மனை அனுப்பி வைத்தது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்