மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்ற பிரதமருக்கு நேர்ந்த கதி... ஆத்திரமடைந்த தந்தையின் பின்புலம் கண்டுபிடிப்பு

Report Print Basu in பிரித்தானியா

லண்டன் மருத்துவமனைியல் ஆய்வு மேற்கொள்ள சென்ற பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனை, கேள்விகளால் துளைத்த ஆத்திரமடைந்த தந்தையின் பின்புலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

வடகிழக்கு லண்டனில் உள்ள Whipps Cross பல்கலைக்கழக மருத்துவமனையில் ஆய்வு பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அந்த மருத்துவமனைியல் பிறந்து 7 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் குழந்தையின் தந்தை Omar Salem, பிரதமரை நேரில் சந்தித்து சரமாரியாக சாடினார்.

சிகிச்சைக்காக பல மணிநேரம் காத்திக்க வேண்டி இருப்பதாகவும், குறித்த வார்டில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை, சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை. இது சரியாக நிர்வாகிக்கப்படவில்லை என குற்றம்சாட்டினார்.

மேலும், NHS அழிக்கப்பட்டுவிட்டது, தற்போது நீங்கள் இங்கு ஊடகங்களின் கவனத்திற்காக தானே வந்தீர்கள் என சாடினார்.

அதிர்ச்சியடைந்த போரிஸ், இங்கு ஊடகங்களே இல்லை என கூறினார். ஆனால், இந்த காட்சியை ஊடகங்கள் படமெடுத்துக்கொண்டிருந்தனர். கடுப்பான Salem, படமெடுத்துக்கொண்டிருந்த ஊடகங்களை காட்டி, இவர்கள் யார் என பிரதமரிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு விளக்கமளித்த போரிஸ், நான் மருத்துவமனை நிலவரம் குறித்து ஆய்வு செய்ய வந்தேன் என கூறினார். ஆனால், நீங்கள் ரொம்ப தாமதமாக வந்திருக்கிறீர்கள்... உண்மை தானே?

ஆண்டாண்டு காலமாக NHS அழிக்கப்பட்டு வருகிறது என Salem சாடினார். மேலும், தன்னுடைய பிரச்சனையை பிரதமருடன் பகிர்ந்துக்கொண்டதாக சம்பவம் குறித்து Salem விளக்கமளித்தார்.

இந்நிலையில் பிரதமரின் வாக்குவாதத்தில் ஈடுபட்ட Salem, Shadow Foreign Secretary Emily Thornberry பணியாற்றி வந்ததவர் என தெரியவந்துள்ளார். மேலும், பிரச்சார நிகழ்ச்சியில் தொழிலாளர் கட்சியையின் Shadow Chancellor John McDonnell-வுடன் Salem இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

Salem-ன் ட்விட்டர் பக்கத்தை ஆய்வு செய்ததின் மூலம், அவர் தொழிலாளர் ஆர்வலர் மற்றும் பிரெக்ஸிட் எதிர்ப்பு பிரச்சாரகர் என தெரியவந்துள்ளது. அதேசமயம் அவர் குழந்தை சிகிச்சை பெற்று வருவது உண்மை என தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து பிரதமர் போரிஸ் ட்விட்டரில் கூறியதாவது, நான் பிரதமராக பதவியேற்று 57 நாட்கள் தான் ஆகிறது. களத்தில் மக்களுடன் உரையாற்றி அவர்களின் பிரச்சனைகளை கேட்பது எனது கடமை. அவர்கள் என்னை ஏற்றுக்கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை.

குறித்த நபர் தனது பிரச்சினைகளை என்னிடம் சொன்னதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், இது என் வேலையின் ஒரு பகுதியாகும் என கூறினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்