பிறக்கும்போது உள்ளங்கை அளவே இருந்த குழந்தை: இப்போது எப்படி இருக்கிறாள் தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிறக்கும்போது உள்ளங்கையளவே இருந்த ஒரு குழந்தை மருத்துவர்களின் கணிப்பையும் மீறி நன்றாக முன்னேறி வருகிறாள்.

பிரித்தானியாவைச் சேர்ந்த Hannah (33), 25 வார கர்ப்பிணியாக இருக்கும்போது, திடீரென அவரது தொப்புள் கொடி, கருவிலிருக்கும் குழந்தைக்கு உணவளிக்க மறுத்துள்ளது.

எனவே கருவைக் கலைத்துவிடலாம் என்று ஆலோசனை கூறிய மருத்துவர்கள், அப்படி இல்லையென்றாலும் அந்த குழந்தை இறந்துவிடும், இல்லையென்றால் அதற்கு cerebral palsy என்னும் தசைகள் ஒழுங்காக செயல்படாத பிரச்சினை ஏற்படும் என்று எச்சரித்திருந்தனர்.

மருத்துவர்களின் எச்சரிக்கையை மீறி குழந்தையை வைத்துக்கொள்ள முடிவு செய்தார் Hannah. 25 வாரங்களே இருக்கும்போது, குறை பிரசவத்தில் குட்டியாக உள்ளங்கை அளவே உள்ள ஒரு குட்டிப்பெண்ணை பெற்றெடுத்தார் Hannah.

இன்குபேட்டரில் வைக்கப்பட்டு, ஆக்சிஜன் அளிக்கப்பட்டு, மருத்துவமனை ஊழியர்களால் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ளப்பட்டாள் அந்த குட்டிப்பெண்.

தற்போது Poppy McSween என்று அழைக்கப்படும் அந்த குட்டிக்குழந்தை இரண்டு வயதுடையவளாக மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறாள்.

Chepstowஇலிருக்கும் தங்கள் வீட்டுக்கு மகளை கொண்டு வந்துள்ள பெற்றோர், அவள் பேசுதல் போன்ற அன்றாட செயல்களை விரைவாக கற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

அவள் வயதுள்ள மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும்போது சில விடயங்களில் அவள் சற்று பின் தங்கியிருந்தாலும், பிழைப்பாளா என மருத்துவர்களாலேயே சந்தேகிக்கப்பட்ட Poppy இரண்டு ஆண்டுகளை வெற்றிகரமாக முடித்து, போராடி தடைகளை தாண்டி வளர்ந்து வருகிறாள்.

மருத்துவர்கள் எச்சரிக்கையையும் மீறி ரிஸ்க் எடுத்தேன், அதற்கு நிச்சயம் நல்ல பலன் கிடைத்துள்ளது என்று கூறும் Poppyயின் தாய் Hannah, மருத்துவர்கள் கைவிட்டாலும் நம்பிக்கையை இழக்க தேவையில்லை என்பதற்கு, பிரச்சினைகளின் மத்தியில் குழந்தையை எதிர்நோக்கியிருக்கும் தாய்மார்களுக்கு தனது வாழ்க்கை, ஒரு நல்ல முன்மாதிரியாக உள்ளதாக தெரிவிக்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்