மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் அக்காவை சந்திக்க புறப்பட்ட தங்கை: 24 மணி நேரத்தில் இருவரும் உயிரிழந்த சோகம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ஜேர்மனியில் உடல் நலமின்றி மரணத்தின் விளிம்பிலிருக்கும் தனது அக்காவை சந்திப்பதற்காக பிரித்தானியாவிலிருக்கும் தங்கை புறப்பட்டுள்ளார்.

ஆனால் விமான நிலையம் செல்வதற்குள்ளாகவே அவருக்கும் பக்கவாதம் தாக்கியுள்ளது.

ஜேர்மனியில் மரணப்படுக்கையிலிருக்கும் Jacqueline (57ஐ சந்திப்பதற்காக புறப்பட்ட Amanda Williams (54), Leicesterஇலுள்ள தெரு ஒன்றில் நிலைகுலைந்து சரிந்தார்.

இருவருக்குமே மூளைக்கு செல்லும் ஒரு இரத்தக்குழாய் வெடித்ததால் பக்கவாதம் ஏற்பட்ட நிலையில், இருவருக்குமே நினைவு திரும்பவேயில்லை.

கடந்த சனிக்கிழமை மருத்துவமனையில் Amandaவின் உயிர் பிரிந்த நிலையில், குடும்பத்தாருக்கு ஜேர்மனியிலிருக்கும் Jacqueline வெள்ளியன்றே இறந்துபோனதாக தகவல் வந்துள்ளது.

அன்பு சகோதரிகள் இருவரும் வெவ்வேறு நாடுகளிலிருந்தாலும், 24 மணி நேர வித்தியாசத்தில் இருவருமே உயிரிழந்துள்ளது குடும்பத்தினருக்கு சோகத்தை ஏற்படுத்தினாலும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்