வெள்ளத்தில் 12 மணி நேரம் சிக்கித்தவித்த பிரித்தானிய குடும்பம்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்த பிரித்தானிய குடும்பத்தினர் 12 மணி நேரத்திற்கு பின்னர் வெள்ளத்திலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவை சேர்ந்த பால் மற்றும் ஆங்கி ஸ்பென்சர் தம்பதியினர் ஒரிஹுவேலாவுக்கு அருகிலுள்ள பென்ஃபெர்ரியில் தங்களுடைய விடுமுறையை கழித்து வந்துள்ளனர்.

அவர்கள் தங்களுடைய 12 மாத குழந்தைகள் இருவர், 12 , 14 வயதுடைய மகள் மற்றும் மகனுடன் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தனர். அப்போது திடீரென ஓட்டலின் அடிப்பகுதியிலிருந்து வெள்ளநீர் ஜன்னல்களை அடித்து நொறுக்கியுள்ளது.

கடுமையான வெள்ளத்தில் சிக்கிக்கொண்டிருந்த பால் குடும்பத்தினர், தங்களுடைய கண்முன்னே தப்ப முயன்ற இரண்டு பேர் அடித்து செல்லப்படுவதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

அந்த பயங்கரமான நிலையை பால் தன்னுடைய செல்போனில் வீடியோவாக எடுத்து பிரித்தானியாவில் உள்ள தன்னுடைய உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அந்த இடத்திலே உதவியில்லாமல் 12 மணி நேரம் தவித்துள்ளனர். பின்னர் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர்கள் மாலை 5 மணியளவில் அவர்களை பத்திரமாக மீட்டெடுத்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்