குழந்தை பிறந்து ஆறே நாட்களில் தாய்க்கு ஏற்பட்ட சோகம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

இளம்பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்து ஆறே நாட்களில் புற்றுநோய் காரணமாக மார்பகங்களை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

தனக்கு மார்பக புற்றுநோய் வந்துள்ளது என அறிந்தவுடன் தனது மார்பகங்களை அகற்றுவது என முடிவெடுத்தார் பிரித்தானியாவைச் சேர்ந்த Roisin Pelan (32).

மருத்துவர்கள் கீமோதெரபி சிகிச்சை கொடுத்துப் பார்க்கலாம், முன்னேற்றம் எதுவும் இல்லையென்றால் பின்னர் அறுவை சிகிச்சைக்கு போகலாம் என்று கூற, அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை Roisin.

அதற்குள் புற்றுநோய் பரவிவிடலாம் என்பதால், அதற்கு கொஞ்சமும் இடம் கொடுக்க அவர் விரும்பவில்லை.

வயிற்றில் ஒரு குழந்தைவேறு, அவள் பிறந்ததும் முதல் வேலை அறுவை சிகிச்சைதான் என்பதில் உறுதியாக இருந்தார் Roisin.

அவர் விருப்பப்படியே, குட்டிக்குழந்தை Ivy பிறந்து ஆறே நாட்களில் அவரது மார்பகங்கள் அகற்றப்பட்டன.

வீராப்பாக அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டாலும், அறுவை சிகிச்சைக்கு முந்தின தினம் அவரால் பயத்தை மேற்கொள்ள முடியவில்லை.

கணவரின் கைகளில் முகத்தை புதைத்து கண்ணீர்விட்ட அவரிடம், யாராவது ஒன்றுமில்லை எல்லாம் சரியாகிவிடும் என கூறமாட்டார்களா என ஏங்கினார் Roisin.

முன்னெல்லாம் தனது உடலைக் குறித்து பெரிதாக எதையும் எடுத்துகொள்ளாத Roisin, இப்போது தனது மொட்டைத்தலையையும் மார்பகங்கள் இல்லத உடலையும் பார்க்க முடியவில்லை என்கிறார்.

Getty image

இதில் சிகிச்சையால் ஏற்படும் தலைசுற்றல், மலச்சிக்கல் என பக்க விளைவுகள் வேறு வாட்டி எடுத்தன.

மலம் கழிப்பதற்கு ஏழு மணி நேரம் கால் வலிக்க உட்கார வேண்டியிருந்தது.

வாய்ப்புண், உலர்ந்த தோல், மீண்டும் கொட்டும் தலைமுடி என அனைத்தும் பாடாய்ப்படுத்தின.

Getty image

பின்னர் அறுவை சிகிச்சை மூலம் செயற்கையாக Roisinக்கு மார்பகங்கள் பொருத்தப்பட்டன, தலையில் விக் வைத்துக்கொள்ளவும் பழகிவிட்டார் அவர்.

தற்போது தனது தழும்புகளைக் குறித்து பெருமை கொள்வதாக தெரிவிக்கும் Roisin, புற்றுநோய் சிகிச்சைக்கான ஆய்வுகள் தொடரட்டும், அதற்கு உதவுவோம் என்கிறார்.

Getty image

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்