பிறந்த அரைமணி நேரத்திற்கு சுவாசிக்காத குழந்தை: இறந்துவிட்டதாக நினைத்தபோது நடந்த அதிசயம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிறந்தது முதல் கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்கு மூச்சு விடாமல் இருந்த குழந்தையை பார்த்து, குடும்பத்தினர் பெரும் சோகத்தில் இருந்த போது அதிசயம் ஒன்று நடந்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த 25 வயதான அலெக்ஸ் கெல்லி என்பவர் கடந்த ஜூன் மாதம் பிரசவ வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், தொப்புள் கொடி குழந்தையின் கழுத்தை சுற்றிக்கொண்டிருப்பதால் உயிர்பிழைப்பது கடினம் என்பதை கண்டறிந்து அவருடைய பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உடனடியாக கெல்லி நார்தும்பிரியா ஸ்பெஷலிஸ்ட் அவசர சிகிச்சை மருத்துவமனையிலிருந்து நியூகேஸில்-அப்-டைனில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிறப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு குழந்தை பிறந்தும் 28 நிமிடங்களுக்கு எந்த சுவாசமும் இல்லாமல் இருந்ததால், குழந்தை குறித்து மருத்துவர்கள் பெற்றோரிடம் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதனால் கெல்லி மற்றும் அவருடைய கணவர் மார்க் ஆகியோர் மிகவும் சோகமாக இருந்த சமயத்தில், அதிசயமாக குழந்தை சுவாசிக்க ஆரம்பித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்