கருத்தடை மாத்திரை எடுத்தும் கர்ப்பிணியான பெண்... ஸ்கேன் செய்த போது காத்திருந்த அதிர்ச்சி!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இங்கிலாந்தை சேர்ந்த கிரேஸ் பேக்கர்-பேடன் (23) என்கிற இளம்பெண் நீண்ட நாட்களாகவே கருத்தடை மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார்.

ஆனால் அப்படி இருந்தும் கடந்த ஆண்டு கர்பமடைந்துள்ளார். இதனை உறுதி செய்வதற்காக மேற்கொண்ட பொது சுகாதார சோதனையின் போது அவர் குழந்தையை எதிர்ப்பார்ப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனை நினைத்து பெரும் மகிழ்ச்சி கொண்ட கிரேஸ் மற்றும் அவருடை கணவர் ஜோ கவுலிங் (28) ஆகியோர், தங்களுடைய உறவினர்களிடம் கூறி என்ன பெயர் வைக்கலாம் என்பது குறித்தும் தீவிரமாக யோசனை செய்ய ஆரம்பித்துள்ளார்.

அந்த மகிழ்ச்சி ஆரம்பித்த அடுத்த சில நாட்களிலே அவர் தினமும் வாந்தி எடுக்கத் துவங்கியதோடு, காலை வியாதியால் பெரும் அவஸ்தையடைந்துள்ளார்.

அவருடைய வயிறும் வீங்கத் தொடங்கியது, இதுவும் கர்ப்பத்தின் காரணமாக இருப்பதாக அவர் கருதியுள்ளார். ஆனால் அவர் பத்து முதல் 12 வார கட்டத்தை அடைந்தபோது இரத்த புள்ளிகள் காணப்பட்டதால், கருச்சிதைவு ஏற்படுமோ என அஞ்சியுள்ளார்.

அவர் ஜோவுடன் வடக்கு டர்ஹாம் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு மருத்துவர்கள் ஸ்கேன் செய்தனர். அதில் குழந்தை வளர்வதற்கான எந்த அறிகுறியையும் மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. மாறாக புற்றுநோய் நிறை வளர்ந்து வருவதைக் கண்டுபிடித்தனர்.

இது ஒரு மோலார் கர்ப்பம் என்று மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இது கர்ப்பகால ட்ரோபோபிளாஸ்டிக் நோய் என்றும் அழைக்கப்படுவதாக கூறியுள்ளனர்.

அடுத்த இரண்டு நாட்கள் கழித்து அந்த புற்றுநோய் நிறையை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். மீண்டும் ஏற்பட 15 சதவீதம் வாய்ப்பிருப்பதால் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு குழந்தை பெற முயற்சிக்க வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்