இளவரசி மேகன் அணிந்திருந்த புதிய செயினில் இருந்த வார்த்தை... அது யார் தெரியுமா? வெளியான புகைப்படம்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியா இளவரசி மேகன் மேர்க்கல் கணவர் ஹரி மற்றும் மகன் ஆர்ச்சி மீது வைத்திருக்கும் அன்பை வித்தியாசமாக வெளிப்படுத்தியுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இளவரசர் ஹரி மற்றும் மகன் ஆர்ச்சியை விட்டு மேகன் மேர்க்கல் அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு சென்றார்.

அங்கு அவர் US tennis championship போட்டியில் தன்னுடைய நெருங்கிய நண்பர் என்று அவர் கூறும் செரீனாவில்லியம்ஸின் ஆட்டத்தை கண்டுகளித்தார்.

பொதுவாகவே மேகன் மேர்க்கல் எங்கு சென்றாலும், அவர் என்ன உடை அணிகிறார்? அவரிடம் இன்று என்ன மாற்றங்கள் தெரிந்தன என்பது செய்தியாக வெளிவரும்.

இந்நிலையில் அமெரிக்காவிற்கு சென்ற மேர்க்கலின் கழுத்தில் புதிதாக தங்க செயின் ஒன்று இருந்துள்ளது. அதுவும் இரண்டு எழுத்துக்களில், ஒன்றில் H எனவும் மற்றொன்றில் A எனவும் குறிப்பிட்டிருந்தது. அதுமட்டுமின்றி அதில் சிறியதாக இரண்டு வைரக்கற்கள் வைக்கப்பட்டுள்ளன.

H என்பது ஹரிக்காவும், A என்பது அவரின் மகனுக்காகவுமே அவர் இப்படி அணிந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் அவர் கணவர் மற்றும் மகன் மீது எந்தளவிற்கு அன்பு வைத்திருக்கிறேன் என்பதை காட்டுகிறார் என்று இணையவாசிகள் கூறுகின்றனர்.

மேலும் தன்னுடைய குழந்தையின் பெயரின் வார்த்தையை செயினில் மேகன் போட்டியிருப்பது இது முதல் முறையல்ல எனவும் கடந்த ஜுலை மாதம் நடந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டிக்கு அவர் வந்திருந்த போது, அவர் அணிந்திருந்த செயினில் A என்ற வார்த்தை அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்