இஸ்லாமியத்தை கைவிட்டு ஆபாச நட்சத்திரமாக மாறிய மகள்... அதன்பின் நடந்த பரபரப்பு சம்பவம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

'இஸ்லாத்தை கைவிட்டு, ஆபாச நட்சத்திரமாக மாறிய' ஒரு பெண்ணைக் கடத்தி கொலை செய்ய சதி செய்ததாகக் கூறப்படும் இரண்டு ஆப்கானிய ஆண்கள் நாடுகடத்தப்படுவதற்கு முன்னதாக இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் வசித்து வரும் முகமது பேட்மேன் (54) என்பவரின் 25 வயது மகள் கடந்த 2017ம் ஆண்டு ஆஸ்திரியாவை சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இஸ்லாத்தை கைவிட்டு யூத மதத்திற்கு மாறிய அந்த பெண், ஸ்லோவாக்கியனில் கணவருடன் சேர்ந்து இளம்பெண்களுக்கான ஆபாச நிறுவனம் ஒன்றினை நடத்தி வந்துள்ளார்.

தன்னுடைய மகள் ஆபாச நட்சத்திரமாக மாறியதை பொறுத்துக்கொள்ள முடியாத முகமது பேட்மேன், தர்யா கான் சஃபி (49) என்பவருடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டார்.

சினிமாவை விஞ்சும் அளவிற்கு மிகப்பெரிய திட்டமிடலை இவர்கள் செய்து வந்துள்ளனர். அதேமசயத்தில் அவர்களை தீவிரமாக கண்காணித்து வந்ததோடு, இருவரின் செல்போன் அழைப்புகளை உற்று கவனித்து வந்த, 'பிரிட்டனின் எஃப்.பி.ஐ' என்று அழைக்கப்படும் தேசிய குற்றவியல் அமைப்பு, நேற்று லண்டன் மற்றும் கோவென்ட்ரியில் அவர்களை கைது செய்தனர்.

அவர்களை பற்றி மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், போரின் போது ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் துருப்புக்களுக்கு உதவியதால் அவர்களுக்கு இங்கிலாந்தில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் உளவுத்துறையில் பணியாற்றிய பேட்மேன், 'அமெரிக்க பாதுகாப்பு அனுமதியை' அனுபவித்ததாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்