பிரெக்சிட் கவலையால் 50 ஆண்டுகள் பிரித்தானியாவில் வசித்த பிரான்ஸ் பெண் தற்கொலை

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் 50 ஆண்டுகளாக கணவருடன் வாழ்ந்து வந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் பிரெக்சிட் கவலையால் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்.

76 வயதான பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மேரி-லூயிஸ் டேவிஸ் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிரித்தானியாவில் அவருடைய கணவர் பீட்டர் (74) உடன் வசித்து வந்தார்.

அவரும் அவரது கணவரும் பிரான்சுக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர், ஆனால் டேவிஸுக்கு இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது குறித்து 'கவலைகள் மற்றும் ஏக்கம்' அதிகமாக இருந்துள்ளது.

இதனால் இந்த ஆண்டு மார்ச் 18 ஆம் திகதி தன்னுடைய வீட்டிலிருந்து வெளியேறிய டேவிஸ் அதன்பிறகு எங்கும் காணப்படவில்லை.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அவரது உடல் வெள்ளம் நிறைந்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது அவருடைய கணவர், பிரெக்சிட் அறிவிக்கப்பட்டதிலிருந்தே டேவிஸ் ஆழ்ந்த சோகத்துடனும், வருத்தத்துடனும் இருந்ததாக கூறியுள்ளனர்.

இந்த நிலையில் வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்ட அரசு அதிகாரி, பிரெக்சிட் கவலையால் உயிரிழந்த முதல் நபர் என அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்