பிரித்தானியாவில் இளம் தம்பதியுடன் தங்கியிருந்த நண்பர் வீட்டுக்குள் நுழைந்த போது கண்ட காட்சி.. அதிர்ந்த தருணம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் தம்பதி வீட்டில் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களின் திருமணம் வீடியோ வெளியாகியுள்ளது.

Staffordshire-ஐ சேர்ந்தவர் கிரில் (31). இவருக்கும் லனா என்ற பெண்ணுக்கும் கடந்த 2016-ல் திருமணம் நடந்த நிலையில் தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன்னர் தம்பதியுடன் அவர்கள் வீட்டில் தங்கியிருந்த கிரிலின் நண்பர் வெளியில் சென்றிருந்த நிலையில் வீட்டுக்குள் வந்தார்.

அப்போது கிரில்லும், லனாவும் சடலமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.

அவர்களின் குழந்தை படுக்கையில் நலமாக இருந்ததும் தெரியவந்தது.

பொலிசாரின் விசாரணையில் கிரில் தனது மனைவி லனாவை கொலை செய்துவிட்டு பின்னர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

ஆனால் கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

இது குறித்து கிரில் நண்பர் கூறுகையில், கிரில் சில காலமாக பணிச்சுமை காரணமாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார்.

இதற்கான சிகிச்சையை எடுத்து கொள்ள மருத்துவர்கள் அவரை வலியுறுத்தி வந்தனர் என கூறியுள்ளார்.

இதனிடையில் கிரில் - லனாவுக்கு நடந்த திருமண நிகழ்வின் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது.

இதை பார்த்து நெகிழ்ச்சியடைந்த பலரும், இந்த அழகான தம்பதிக்கு இப்படியொரு சோகமா என கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்