லண்டன் விமானத்தில் இருந்த பணிப்பெண் என்னிடம் நடந்து கொண்ட விதம்.. ஆண் பயணியின் வைரல் பதிவு

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் இருந்து இந்தியா திரும்பிய நபருக்கு விமான பணிப்பெண் மூலமாக விமானத்தில் கிடைத்த அனுபவம் குறித்து அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

அர்ஜூன் குப்தா என்ற நபர் தனது குடும்பத்துடன் லண்டனுக்கு சுற்றுலா சென்ற நிலையில் டெல்லிக்கு திரும்ப தயாரானார்.

அப்போது தனது விமானத்தில் நடந்த அனுபவம் குறித்து அவர் சமூகவலைதளத்தில் பகிருந்துள்ளார். அர்ஜூன் கூறுகையில், விமானத்தில் ஏற விமான நிலையம் வந்த போது எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

பின்னர் சிரமப்பட்டு விமானத்தில் ஏறினேன். அப்போது இந்தியாவை சேர்ந்த விமானப்பணிப் பெண்ணிடம் என் பிரச்சனையை கூறினேன்.

அவர் என்னை 7 மணி நேர விமான பயணத்தில் மிக சிறப்பாக கவனித்து கொண்டார்.

எனக்கு காய்ச்சல் உள்ளதா என அடிக்கடி டெம்ப்ரேச்சர் வைத்து சோதனை செய்தார், சரியான நேரத்தில் உணவு, தேனீர், மாத்திரகளை கொடுத்தார்.

பயணத்தின் போது நான் ஒரு மணி நேரம் தூங்கிவிட்டேன். அப்போது கூட இரு முறை வந்து என்னை பார்த்து போயுள்ளார்.

அவரின் நெகிழ்ச்சி செயலால் என் உடல் சிறிதளவு தெம்படைந்தது, பின்னர் விமானமானது துபாய்க்கு வந்தது.

அங்கிருந்து இன்னொரு விமானம் மூலம் நான் டெல்லிக்கு செல்ல வேண்டும் என்ற நிலையில் விமானத்தில் இருந்து கீழே இறங்க சக்கர நாற்காலியை கூட தயாராக அவர் வைத்திருந்தார்.

அந்த விமான பணிப்பெண்ணின் உதவியை என்னால் மறக்கவே முடியாது, டெல்லிக்கு வந்தவுடன் நான் பயணித்த எமிரேட்ஸ் விமானத்தின் டுவிட்டர் ஐடிக்கு நான் ஒரு டுவீட் செய்தேன்.

அதில், உங்கள் விமான பணிப்பெண் மிகசிறப்பாக எனக்கு உதவினார், அவர் தனது பணியில் மேலும் வளருவார் என நம்புகிறேன்.

ஒரு விமானக் குழு உறுப்பினரால் எனக்கு வழங்கப்பட்ட சிறந்த சிகிச்சையில் இதுவும் ஒன்று என பதிவிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்