3 வயதில் விட்டு சென்ற தாயை கண்டுபிடிக்க வாழ்க்கை முழுவதையும் செலவழித்த மகள்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

3 வயதில் தன்னை கைவிட்டு சென்ற தாயை கண்டுபிடிப்பதற்காக தன்னுடைய வாழ்க்கை முழுவதையுமே பாசம் நிறைந்த மகள் செலவளித்துள்ளார்.

தொலைந்த உறவினர்களை ஒன்று சேர்ப்பதை குறிக்கோளாக கொண்ட நிகழ்ச்சி ஒன்று பிரித்தானியாவில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் இங்கிலாந்தை சேர்ந்த Beryl Everall என்பவர் கலந்துகொண்டு, அவரது தாயார் மிரியம் ஸ்டோக்ஸ் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குறுநடை போடும் குழந்தையாக இருந்தபோது தன்னை விட்டுவிட்டதாகவும், 'திரும்பி வரவில்லை' என்று தெரிவித்தார்.

அந்த நிகழ்ச்சியின் மூலம் தற்போது Beryl தன்னுடைய குடும்பத்தை சந்தித்துள்ளார்.

Beryl சிறுவயதிலிருந்தே அவருடைய தந்தை மற்றும் அத்தையால் பராமரிக்கப்பட்டு வந்தார். 8 வயது நடந்த போது முதன்முறையாக, அம்மா எங்கே இருக்கிறார்? என கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளார்.

அமெரிக்க இராணுவ வீரருடன் அவர் ஓட்டம்பிடித்து விட்டதாக அவருடைய அத்தை Beryl-டம் கூறியுள்ளார். அதனை நம்பாத Beryl மேலும் சில தகவல்களை பெறுவதற்காக தாத்தாவை தேடி சென்றுள்ளார். ஆனால் அவருடைய தாத்தாவும் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை கேள்விப்பட்டு Beryl பெரும் சோகமடைந்துள்ளார்.

அதன்பிறகு தொலைதூர உறவினர்களை தேடிப்பிடித்து விசாரித்த போது, மூன்று வயதில் யுவோன் என அழைக்கப்படும் தங்கை தனக்கு இருப்பதை கண்டுபிடித்துள்ளார். தொடர்ந்து தன்னுடைய உறவினர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் 2000ம் ஆண்டில் தாய் இறந்துவிட்டார் என்கிற தகவல் மட்டும் கிடைத்துள்ளது.

இருந்தாலும் தன்னுடைய சகோதரியை தேடும் முயற்சியினை Beryl பல வருடங்களாக தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில் Beryl தற்போது கார்டிஃப் நகரில் முதன்முறையாக யுவோனை சந்தித்துள்ளார். அப்போது தான் அவருக்கு தெரியவந்துள்ளது, தனக்கு மேலும் டேவிட் மற்றும் ரிச்சர்டு என்கிற இரண்டு சகோதரர்கள் இருக்கிறார்கள் என்பது.

தன்னுடைய குடும்பத்துடன் வெற்றிகரமாக இணைந்துள்ள Beryl, 60 ஆண்டுகளாக நான் காத்திருந்த நாள் இது தான் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்