எனக்கு தேனிலவு.. திருமணத்தின் போதே இதை எப்படி செய்யமுடியும்.. அழகான இளம் பெண்ணை குழப்பத்தில் ஆழ்த்திய பிரச்னை

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த இளம் பெண்ணுக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்கவுள்ள நிலையில் அவரது தேனிலவு சம்மந்தமான பிரச்னை அவரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

மான்செஸ்டரை சேர்ந்த நடாலி டெய்லர் என்ற பெண்ணுக்கும் எட் பார்டன் என்ற நபருக்கும் செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி திருமணம் நடக்கவுள்ளது.

திருமணத்துக்கு பின்னர் 23ஆம் திகதி Croatia நாட்டுக்கு தேனிலவு செல்ல நடாலி விமான டிக்கெட்டை முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த விடயத்தில் தான் தற்போது அவருக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது.

அதாவது 23ஆம் திகதிக்கு பதிலாக 20ஆம் திகதி காலை 6 மணிக்கு மான்செஸ்டரிலிருந்து Croatiaவுக்கு விமானம் செல்லும் என டிராவல் ஏஜென்சி நிறுவனமான டியூஐ நடாலியிடம் தெரிவித்துள்ளது.

இது நடாலியை கோபத்திலும், அதிருப்தியிலும் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து நடாலி கூறுகையில், எனக்கு திருமணம் நடக்கவுள்ள அதே நாளில் தேனிலவு செல்ல விமானம் கிளம்பும் என சொல்கிறார்கள், இதை எப்படி ஏற்று கொள்ள முடியும்?

இதற்கு பதிலாக லண்டனில் இருந்து 23ஆம் திகதி விமானத்தில் செல்கிறீர்களா என கேட்கிறார்கள்.

இது எங்களுக்கு தேவையில்லாத அலைச்சலை ஏற்படுத்தும், டியூஐ ஊழியர்கள் என்னிடம் அலட்சியாக பேசுகிறார்கள், தேனிலவை ரத்து செய்துவிட்டு பணத்தை திரும்ப பெறலாமா அல்லது லண்டனுக்கு சென்று அங்கிருந்து செல்லலாமா என இன்னும் முடிவு செய்யவில்லை என கூறியுள்ளார்.

இது தொடர்பாக டியூஐ செய்தி தொடர்பாளர் பேசுகையில், எங்கள் வாடிக்கையாளர் நடாலிக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறோம்.

அவர் தனது தேனிலவை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக தெரிகிறது, இது குறித்து அவரிடம் தொடர்ந்து பேசுவோம் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்