பிரித்தானிய அரச குடும்பத்தால் மறைக்கப்பட்ட இளவரசி டயானாவின் அந்த புகைப்படம்: வெளியான பின்னணி

Report Print Arbin Arbin in பிரித்தானியா

மறைந்த பிரித்தானிய இளவரசி டயானாவின் குறிப்பிட்ட புகைப்பட தொகுப்பு ஒன்று பொதுமக்கள் பார்வையில் இருந்து பிரித்தானிய அரச குடும்பத்தால் மறைக்கப்பட்டது தற்போது அம்பலமாகியுள்ளது.

கடந்த 1997 ஆம் ஆண்டு சர்வதேச புகழ்பெற்ற பெரு நாட்டு புகைப்படக்கலைஞரே இளவரசி டயானாவின் அந்த அரிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

அதே ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச பத்திரிகை ஒன்றின் முகப்பு படமாகவும் அந்த புகைப்படம் அமைந்தது.

அப்போது தான் சார்லஸ் டயானா தம்பதிகள் விவாகரத்து பெற்றிருந்தனர். இருப்பினும் டயானாவின் முகத்தில் அது எதுவும் தென்படவில்லை என்றே புகைப்படக்கலைஞர் மரியோ டெஸ்டினோ பின்னர் தெரிவித்திருந்தார்.

மட்டுமின்றி முன்னர் எப்போதும் இல்லாத வகையில் டயானா மகிழ்ச்சியுடன் இருந்ததாகவும் அவர் பதிவு செய்துள்ளார்.

அந்த புகைப்படங்களே டயானா தமது வாழ்க்கையில் இறுதியாக எடுத்துக் கொண்டது எனவும் மரியோ தெரிவித்துள்ளார்.

அந்த புகைப்படங்களையே பிரித்தானிய அரச குடும்பம் பொதுமக்கள் பார்வையில் இருந்து விலக்கி வைத்துள்ளது.

ஆனால், அந்த புகைப்படங்களை பதிவு செய்த மரியோ டெஸ்டினோ, டயானாவின் இரு பிள்ளைகளுக்கும் குறித்த புகைப்படங்களை பரிசாகவும் அளித்துள்ளார்.

மட்டுமின்றி, அதே ஜூன் மாதத்தில் தான், அரச குடும்பத்தில் இருந்து அளிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ பட்டத்தையும் இழந்தார்.

அதன் பின்னர் டயானா உலக அரங்கில் தமது கருத்துகளை வெளிப்படையாக பேசத் தொடங்கினார்.

அங்கோலா நாட்டுக்கு சென்று கண்ணி வெடிகளால் ஏற்படுத்தப்படும் வன்முறைகளுக்கு எதிராக குரல் எழுப்பினார்.

மட்டுமின்றி பல நாடுகளுக்கும் விஜயம் செய்த டயானா அங்குள்ள அரசியல், சமூக பிரச்னைகளை துணிவுடன் பேசினார்.

தற்போது நீண்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு, டயானாவின் புகைப்படங்களை பதிவு செய்யப்பட்ட தெற்கு லண்டனில் உள்ள அதே அரங்கில் மீண்டும் குறித்த புகைப்படங்களை காட்சிக்கு வைத்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்