காதலியை கொன்று தின்ற பிரித்தானியர்: இன்று எப்படி இருக்கிறார் தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தனது காதலியை கொன்று தின்ற ஒரு பிரித்தானியர் மீண்டும் லண்டனில் குடியேறியுள்ளதால் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அச்சத்தில் உறைந்துள்ளார்கள்.

கொள்ளைச் சம்பவங்கள் இரண்டில் தொடர்புடைய பிரித்தானியரான Paul Durant ஸ்பெயினில் தலைமறைவாக இருக்கும்போது, எஸ்ஸெக்சை சேர்ந்த Karen Durrell (41) என்னும் பெண்ணைச் சந்தித்திருக்கிறார்.

ஒரு நல்ல வாழ்க்கையைத்தேடி ஸ்பெயினின் பெனிடார்முக்கு வந்த Karenம் Durantம் காதலிக்கத் துவங்கியிருக்கிறார்கள்.

இந்நிலையில் ஒருநாள் Karenஇன் வீட்டுக்குள் நுழைந்த பொலிசார், அவரது அறையில் இரத்தம் சிந்திருப்பதைக் கண்டிருக்கிறார்கள்.

தேடும்போது, இரத்தத்துடன் கூடிய ஒரு கத்தியும், சில சதைத் துணுக்குகளும் கிடைத்துள்ளன. ஆனால் அங்கு Karenஐக் காணவில்லை.

விசாரித்ததில், தான் Karenஐக் கொலை செய்து விட்டதாகவும், அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, தின்று விட்டதாகவும் கூறியிருக்கிறார் Durant.

Karenஐக் கொலை செய்த குற்றத்திற்காக 12 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த Durant, பின்னர் கொள்ளைச் சம்பவங்களுக்காக பிரித்தானியாவுக்கு கொண்டு வரப்பட்டு மிச்சமிருந்த தண்டனையை நிறைவு செய்வதற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த மாதம் விடுதலை செய்யப்பட்ட Durant, தற்போது கிழக்கு லண்டனில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் குடியேறியுள்ளார்.

தங்கள் பகுதியில் நர மாமிசம் தின்னும் ஒரு நபர் குடியேறியுள்ள விடயம் தெரியவந்துள்ளதையடுத்து, அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்