பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனின் வீட்டில் இளம்பெண்ணுடன் இளவரசர்; கசிந்தது வீடியோ

Report Print Basu in பிரித்தானியா

அமெரிக்க சிறையில் தற்கொலை செய்துக்கொண்ட சிறார் பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனின் வீட்டில், 9 ஆண்டுகளுக்கு முன்பு இளவரசர் ஆண்ட்ரூ இருந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறார் பாலியல் புகாரின் அடிப்படையில் விசாரணைக் கைதியாக சிறையில் இருந்து வந்த அமெரிக்க கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் , சமீபத்தில் சிறை அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அமெரிக்க சிறையில் தற்கொலை செய்துக்கொண்ட எப்ஸ்டீன், பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். இந்நிலையில், 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 6ம் திகதி, நியூ யார்க்கில் உள்ள எப்ஸ்டீன் மன்ஹாட்டன் வீட்டிலிருந்து இளவரசர் ஆண்ட்ரூ ஒரு பெண்ணை வழி அனுப்பிய காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எப்ஸ்டீன் மன்ஹாட்டன் வீட்டை சிறார்களை தவறாக பயன்படுத்தும் இடமாக வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2010. டிசம்பர் 6ம் திகதி எப்ஸ்டீன் ஒரு இளம் பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறிய ஒரு மணி நேரத்திற்குள் இளவரசர் ஒரு பெண்ணை வழி அனுப்பிய காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. முன்னதாக, எப்ஸ்டீன் அடிமையாக வைத்திருந்த வர்ஜீனியா ராபர்ட்ஸ், நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் வீட்டில் இளவரசருடன் தவறு செய்ததாக வெளிப்படையாக கூறினார்.

ஆனால், பக்கிங்ஹாம் அரண்மனை இளவரசர் எந்த தவறான செயலிலும் ஈடுபடவில்லை எனக்கூறி குற்றச்சாட்டை மறுத்துவிட்டது. மேலும், பிரித்தானியா ராணி வெளிப்படையாக இளவரசர் ஆண்ட்டூவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

எப்ஸ்டீன் தற்கொலை செய்துக்கொண்ட பின்னர் முதல் முறையாக இளவரசர் ஆண்ட்ரூ வாய்திறந்துள்ளார், தொழிலதிபருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கண்ட தான் அதிர்ச்சியில் உறைந்தாக விவரித்துள்ளார். கோடீஸ்வரர் எப்ஸ்டீனுடன் பல முறை புகைப்படம் எடுக்கப்பட்ட இளவரசர் ஆண்ட்ரூ, எப்ஸ்டீனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்