இணையத்தில் வைரலாகும் இளவரசர் ஹரியின் முன்னாள் காதலி படங்கள்

Report Print Basu in பிரித்தானியா

இளவரசர் ஹரியின் முன்னாள் காதலி கிரெசிடா போனஸ், இளவரசருடனான தனது காதலுக்கு முன்பு அவர் டேட்டிங் செய்த நபரை திருமணம் செய்து கொள்ள நிச்சயதார்த்தம் செய்துள்ளார்.

கிரெசிடா போனஸ், ஹரி வென்ட்வொர்த்-ஸ்டான்லியை ஜோடி, நாங்கள் திருமணம் செய்து கொள்ள போகிறோம் என்ற தலைப்பில் நிச்சயதார்த்த மோதிரத்துடன் இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. கேட்டின் சகோதரரான ஜேம்ஸ் மிடில்டன், இந்த ஜோடியை வாழ்த்திய பலரில் ஒருவர், மிகவும் அற்புதம் என்று பதிவிட்டுள்ளார்.

​​இளவரசர் ஹரி மற்றும் கிரெசிடா போனாஸ் ஆகியோர் 2012 ஆம் ஆண்டு டேட்டிங் செய்யத் தொடங்கினர். 2012 பிற்பகுதியில் ஆப்கானிஸ்தானில் பணியாற்றும் போது இளவரசர் தொடர்ந்து கிரெசிடாவுக்கு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது, இந்த ஜோடி 2013 ஆம் ஆண்டு மீண்டும் ஒன்றாக இணைந்தது.

பல அரச விழாக்களில் ஒன்றாக கலந்து கொண்ட பிறகு, இந்த ஜோடி 2014 ஆம் ஆண்டில் பிரிந்ததாகக் கூறப்படுகிறது, இருப்பினும் அவர்கள் நட்பாக இருந்தனர், மேலும் கிரெசிடா போனாஸ் கடந்த ஆண்டு ஹரி மற்றும் மேகனின் திருமணத்திற்குச் சென்றார்.

30 வயதான போனஸ், மில்ஃபோர்டு ஹேவனின் மார்ச்சியோனஸின் மகன் வென்ட்வொர்த்-ஸ்டான்லியுடன் டேட்டிங் செய்து வருகிறார், இளவரசர் ஹரி உடனான தனது உறவைத் தொடங்குவதற்கு முன்பு கிரெசிடா போனஸ், ஹரி வென்ட்வொர்த்-ஸ்டான்லியை ஜோடி டேட்டிங் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. 2014 ஆம் ஆண்டில் இளவரசர் ஹரியை பிரிந்ததிலிருந்து இருவர்கள் மீண்டும் இணைந்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்