விமானத்தில் பிரித்தானிய முதியவருக்கு பக்கவாதம்: மருத்துவ உதவிக்கு மறுத்த ஊழியர்கள்!

Report Print Arbin Arbin in பிரித்தானியா

ஸ்பெயின் நாட்டு தீவு ஒன்றில் இருந்து லண்டன் திரும்பிய பிரித்தானியருக்கு விமானத்தில் பக்கவாதத்துக்கான சிகிச்சை வழங்க மறுத்த விமான சேவை நிறுவனம் தற்போது இழப்பீடு வழங்கியுள்ளது.

பிரித்தானியரான Keith Tarry ஸ்பெயின் நாட்டு தீவு ஒன்றில் இருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் EasyJet விமானத்தில் நாடு திரும்பியுள்ளார்.

சம்பவத்தன்று விமானத்தில் வைத்து அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பேச முடியாமலும், நகரவே முடியாமலும் அவதிக்கு உள்ளாகியிருக்கிறார்.

ஆனால் விமானத்தில் அப்போதிருந்த ஊழியர்களுக்கு பக்கவாதத்திற்கு முதலுதவி அளிக்க தெரிந்திருக்கவில்லை என கூறப்படுகிறது.

இருப்பினும் கீத் டாரி மீது கவனம் வேண்டும் என அவருக்கு பக்கத்தில் இருந்த பயணிகளிடம் விமான ஊழியர்கள் வலியுறுத்தி இருந்துள்ளனர்.

விமானம் லண்டனில் தரையிறங்கிய போது, டாரி சக்கர நாற்காலியில் வைத்து அழைத்து வந்துள்ளது அவரது மனைவி மற்றும் பிள்ளைகளை கடுமையாக பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் விமான சேவை நிறுவனத்திற்கு எதிராக சட்ட போராட்டத்திற்கு முயன்ற டாரியின் குடும்பம், அதில் தற்போது வெற்றியும் கண்டுள்ளது.

கடந்த மாதம் பக்கவாதம் தொடர்பான நோயினால் டாரி தமது 90-து வயதில் மரணமடைந்துள்ளார்.

அன்று விமானத்தில் தமது கணவரை விமான ஊழியர்கள் உரிய முதலுதவி அளித்து பாதுகாத்திருந்தால், இன்னும் சில ஆண்டுகள் அவர் உயிருடன் இருந்திருப்பார் என டாரியின் மனைவி தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் தற்போது EasyJet விமான சேவை நிறுவனம் டாரி குடும்பத்தாருக்கு இழப்பீடாக 165,000 பவுண்டுகள் வழங்க முன்வந்துள்ளது.

இந்த பணத்திற்காக தாங்கள் போராடவில்லை எனவும், தமது கணவரின் மருத்துவ செலவுக்கே இந்த தொகை போதுமானதாக இல்லை என டாரியின் மனைவி தெரிவித்துள்ளார்.

ஆனால் இனியேனும், விமானத்தில் பயிற்சி பெற்ற ஊழியர்களை பணிக்கு அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கை மட்டுமே தங்களுக்கு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்