லண்டனில் பயங்கரம்.! குடிபோதையில் உறங்கிய இளைஞர்.. உடல் எரிந்து சாம்பல்: நடந்தது என்ன?

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியா தலைநகர் லண்டன் ரயில் நிலையத்தில் குடிபோதையில் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய இளைஞர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விம்பிள்டன் ரயில் நிலையத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. குடிபோதையில் நிதானம் இல்லாமல் ரயில் நிலையத்திற்குள் வந்த இளைஞர், 8 மற்றும் 9 நடைமேடைகளுக்கு இடையிலான தண்டவாளத்தில் சாவகாசமாக படுத்து உறங்கியுள்ளார்.

இதைக்கண்ட நடைமேடை பாதுகாவலர்கள், இளைஞரை எழுப்பி கண்டித்துள்ளனர், போதையில் எழுந்து நிற்க முடியாமல் திணறிய இளைஞர் நகர முடியாமல், மீண்டும் கீழே விழுந்துள்ளார்.

கீழே விழுந்த இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்து மரக்கட்டை போல் ஆகியுள்ளார், பின்னர், உடல் கருகி புகை வந்துள்ளது. தகவல் அறிந்த சம்பவயிடத்திற்கு மருத்துவ உதவிக்குழுவினர் மற்றும் போக்குவரத்து பொலிசார் விரைந்துள்ளனர்.

இளைஞரை சோதனை செய்த மருத்துவக் குழுவினர் அவர் உயிரிழந்து விட்டதாக அறிவித்துள்ளனர். இளைஞரின் மரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை என குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரிகள், அவரை அடையாளம் கண்டு அவர்களின் உறவினர்களுக்கு தெரிவிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்