மர்மமாக கொல்லப்பட்ட மொடல் அழகி... கடற்கரையில் இறுதி நிமிடங்களில் என்ன நடந்தது? வெளிச்சத்திற்கு வந்தது உண்மை

Report Print Basu in பிரித்தானியா

தென் ஆப்பிரிக்கா கடற்கரையில் சூரிய அஸ்தமனம் பார்க்கச் சென்ற பிரித்தானியா மொடல் மற்றும் கல்லூரி மாணவி மர்மமாக கொல்லப்பட்ட சம்பவத்தின் விசாரணை முடிவில் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த ஆண்டு கிறிஸ்மஸ் விடுமுறைக்காக தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுலா சென்ற 19 வயதான சினேட் மூட்லியர் என்ற பிரித்தானியா மாணவி மர்மமான முறையில் இறந்தார்.

கேம்பிரிட்ஜில் உள்ள ஆங்கிலியா ரஸ்கின் பல்கலைக்கழகத்தின் மொடல் மற்றும் தத்துவ படிப்பு பயிலும் மாணவி, சம்பவத்தன்று டர்பனுக்கு அருகிலுள்ள உம்லானாகா ராக்ஸில் சூரிய உதயத்தைப் பார்க்கச் சென்றதாகக் கூறப்படுகிறது, அப்போது கரையில் இருந்த சினேட்டை சக்திவாய்ந்த அலை தாக்க, அவர் பாறை மீது மோதியுள்ளார், பின்னர், அலை அவரை கடலுக்குள் இழுத்துச்சென்றுள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன் பின்னர், கேம்பின் வில்பர்டனைச் சேர்ந்த சினேட்டின் பெற்றோர்களான பாப் மற்றும் நொலன் மூட்லியருக்கு, 19 வயது மகள் கடலில் இழுத்துச்செல்லப்பட்டார் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆனால், பின்னர் மருத்துவமனையில் சினேட் இறந்தார்.

நொலன் மூட்லியர் தனது மகள் கிறிஸ்துமஸ் தினத்தன்று ஒரு உணவகத்தில் இருந்தபோது போனில் பேசியதாகவும், அவர் நன்றாகவும் மகிழ்ச்சியாகவும் தோன்றினார் என்றும், பின்னர் அவர் கடற்கரைக்குச் சென்றார் என்றும் கூறினார். அருகிலுள்ள டர்பனில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், பாறையைத் தாக்கியதில் தலையில் காயம் இருப்பதையும், கிட்டத்தட்ட நீரில் மூழ்கிய பின்னர் ஏற்பட்ட பாதிப்புகளால் அவர் இறந்துவிட்டதையும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...