லண்டனில் உள்ளது தான் மிக மோசமான விமான நிலையம் என விமர்சித்த மக்கள்! காரணம் என்ன? வைரலான வீடியோ

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் உள்ள லூடான் விமான நிலையத்துக்குள் யாரும் எதிர்பார்க்காத வகையில் மழை கொட்டி தீர்த்துள்ளது.

பிரித்தானியாவின் லண்டனில் அமைந்துள்ளது லூடான் விமான நிலையம்.

இந்த விமான நிலையம் அமைந்துள்ள பகுதியில் பலத்த மழை பெய்த நிலையில் விமான நிலையத்தின் மேற்கூரையின் மீது திடீரென விரிசல் விழுந்தது.

இதையடுத்து அந்த விரிசல் வழியாக மழை விமானம் நிலையம் உள்ளேயும் பெய்து அந்த இடமே சிறிய குளம் போல காட்சியளித்துள்ளது.

இதனால் விமான நிலையத்திற்குள் வந்த பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதை தொடர்ந்து பிரித்தானியாவின் மோசமான விமான நிலையம் இது தான் என பலரும் லூடான் விமான நிலையத்தை விமர்சித்துள்ளனர்.

இதன் காரணமாக பயணிகளுக்கு ஏற்பட்ட இடையூறுகளுக்கு வருத்தம் தெரிவிப்பதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்