இலங்கையில் தங்கியிருந்த பிரித்தானியருக்கு நேர்ந்த பரிதாப கதி! உடனடியாக விமானத்தில் பறந்து வந்த மனைவி

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த நபர் ஒருவர் இலங்கையில் தங்கி பணிபுரிந்து வந்த நிலையில் கொசு கடித்ததன் விளைவாக டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு பின்னர் உடல்நிலை மோசமானதால் உயிரிழந்துள்ளார்.

பிரித்தானியாவின் Preston நகரை சேர்ந்தவர் கோலின் வெயிட்சைட் (52). இவர் கட்டிடம் கட்டும் தொடர்பான பணி செய்து வந்தார்.

கோலின் அபுதாபி, துபாய் போன்ற நாடுகளில் ஏற்கனவே பணியாற்றியுள்ள நிலையில் கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக இலங்கையில் தங்கி பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் கோலினை கொசுக்கள் கடித்த நிலையில் அதன் காரணமாக அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து கொழும்பில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், பின்னர் கடந்த மாதம் 14ஆம் திகதி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து கணவரை கவனித்து கொள்ள கோலினின் மனைவி கரோலின் இலங்கைக்கு விமானத்தில் பறந்து வந்தார்.

தொடர்ந்து கோலினுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை அவர் சொந்த ஊருக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கோலின் நேற்று முன் தினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக கரோலின் கூறுகையில், நிம்மதியாகவும், நிரந்திரமாகவும் உறங்குங்கள் கோலின், அவர் குணமடைந்துவிடுவார் என எதிர்பார்த்தோம், ஆனால் பக்கவாதம் ஏற்பட்டு அவர் உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது, அவர் இழப்பை ஈடு செய்ய முடியாது என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்