கடும் சிக்கலில் பிரித்தானிய இளவரசர்..! சிக்கியது தற்கொலை செய்த கோடீஸ்வரரின் ரகசிய டைரி

Report Print Basu in பிரித்தானியா

அமெரிக்க சிறையில் தற்கொலை செய்துக்கொண்ட பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ஜெஃப்ரி எப்ஸ்டீனின் ரகசிய டைரி சிக்கியுள்ளது.

சிறார்களை பாலியல் புகாரின் அடிப்படையில் அமெரிக்க கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் கடந்த ஜூலை 6 ஆம் திகதி முதல் விசாரணைக் கைதியாக சிறையில் இருந்து வந்த நிலையில் சனிக்கிழமை தமது சிறை அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனிடையே, எப்ஸ்டீனின் டைரி சிக்கியுள்ள நிலையில் பணக்காரர்களுடனும் புகழ்பெற்றவர்களுடனும் அவருக்கு இருந்த நட்பின் விரிவான குறிப்புகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எப்ஸ்டீன் ரகசிய டைரி சிக்கியுள்ள நிலையில், பிரித்தானியா மகாராணியுடன். இளவரசர் ஆண்ட்ரூ மகிழ்ச்சியுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை பால்மோரலில் வழிபாட்டிற்குச் சென்றபோது குறித்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் காரில் தனக்கு பிடித்த மகனான ஆண்ட்ரூவுடன் உட்கார்ந்து மகாராணி சிரித்தபடி பயணம் செய்துள்ளார்.

கோடீஸ்வர் நண்பரும், சிறார் பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீன் தற்கொலைக்கு பின்னர் இளவரசர் ஆண்ட்ரூ பொதுவெளியில் தோன்றுவது இதுவே முதன்முறையாகும்.

ஆண்ட்ரூ மற்றும் கிஸ்லைன் மேக்ஸ்வெல் உட்பட சக்திவாய்ந்த நண்பர்களுடனான தனது நட்பை விவரிக்கும் ஒரு டைரியை எப்ஸ்டீன் ஒரு காப்பீட்டுக் கொள்கையாக வைத்திருப்பதாக ஆதாரங்கள் தெரிவித்தன.

எப்ஸ்டீனின் டைரி சிக்கியுள்ளதால் பிரித்தானியா மகாராணிக்கும் மற்ற மூத்த அரச குடும்பத்தினருக்கும் மிகுந்த கவலையை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்