தூக்கத்தில் இருந்த குடும்பம்... குடியிருப்புக்கு நெருப்பு வைத்து மொத்த பேரையும் கொன்ற கொடூரன்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறார்கள் உள்ளிட்ட மொத்தம் 8 பேரை குடியிருப்புக்கு நெருப்பு வைத்து கொன்ற கொடூரனுக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேற்கு யார்க்ஷயரில் உள்ள ஹடர்ஸ்பீல்டு பகுதியிலேயே நடுங்க வைத்த இச்சம்பவம் அரங்கேறியது. இந்த வழக்கில் 37 வயதான ஷாகித் முகமது என்ற இளைஞர் குற்றவாளி என நிரூபணமான நிலையில் அவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஹடர்ஸ்பீல்டு பகுதியில் உள்ள பிர்க்பியில் கடந்த 2002 ஆம் அண்டு சகோதரியின் காதல் விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து, ஷாகித் மொத்த குடும்பத்தையும் கொலை செய்துள்ளார்.

பெட்ரோல் போத்தல்களை குடியிருப்புக்குள் சிதறவிட்டு, பின்னர் நெருப்பு வைத்துள்ளார். இதில் தூக்கத்தில் இருந்த 5 சிறார்கள் உள்ளிட்ட மொத்தம் 7 பேர் உடல் கருகி பலியாகினர்.

சிறார்களின் பாட்டி இந்த களேபரத்தில் இருந்து உயிர் தப்ப முயன்றவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஒரு வாரத்திற்கு பின்னர் மரணமடைந்தார்.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக ஷாகித் பொலிஸ் விசாரணையை எதிர்கொண்டார். ஆனால் பிணைக்கு முதிராமல் பாகிஸ்தானுக்கு தப்பினார்.

தற்போது நான்கு வார கால நீதிமன்ற விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் லீட்ஸ் கிரவுன் நீதிமன்ற நீதியரசர் ராபின் ஸ்பென்சர், இந்த விவகாரம் தொடர்பில் தமது தீர்ப்பை வெளியிட்டுள்ளார்.

சவுத் பர்வேஸ் என்ற நபரை தமது சகோதரி ஷாஹிதா யூனிஸ் காதலித்து வந்ததே இந்த படுகொலைக்கு ஷாகிதை தூண்டியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்