விமானத்தில் மோசமாக நடந்து கொண்ட ஜோடி: பிரான்சில் அவசரமாக தரையிறக்கப்பட்ட லண்டன் விமானம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

லண்டனிலிருந்து ஜிப்ரால்டர் புறப்பட்ட ஒரு விமானம், விமானத்திலிருந்த ஒரு ஜோடி மோசமாக நடந்து கொண்டதையடுத்து, பிரான்சில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமான ஊழியர்களிடம் அந்த ஜோடி முரட்டுத்தனமாக நடந்து கொண்டதையடுத்து, மற்ற விமான பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படுவதை உணர்ந்த விமானி, விமானத்தை பிரான்சில் தரையிறக்கினார்.

தயாராக இருந்த பொலிசார் அந்த ஆணையும் பெண்ணையும் விமானத்திலிருந்து இறக்கி அழைத்துச் சென்றனர்.

தங்களைப் பொருத்தவரையில், தங்கள் பயணிகளின் பாதுகாப்பும் சுமூகமான பயணமும்தான் முக்கியம் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவர்களை விமானத்திலிருந்து பொலிசார் அழைத்துச் செல்லும்போது, சக பயணிகள் மகிழ்ச்சியில் குரல் எழுப்பியதோடு, குட் பை என்றும் சத்தமிட்டனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்