சீஸ் துண்டால் பறிபோன பிரித்தானிய சிறுவனின் உயிர்: மரணப்படுக்கையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட தாயார்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
1119Shares

பிரித்தானியாவில் சீஸ் துண்டால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக 13 வயது சிறுவன் பரிதாபமாக மரணமடைந்த நிலையில், மருத்துவமனையில் பதிவு செய்த கடைசி புகைப்படத்தை தற்போது அவரது தாயார் வெளியிட்டுள்ளார்.

மேற்கு லண்டனில் உள்ள வில்லியம் பெர்கின் பாடசாலையில் கல்வி பயின்று வந்த 13 வயதான கரன்பீர் சீமா ஒவ்வாமை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சிறுவன் கரன்பீர் சிகிச்சை பலனின்றி இறந்த பின்னர் தாம் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தாயார் ரினா சீமா தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுவனுக்கு கோதுமை, சீஸ் உள்ளிட்ட பால் பொருட்கள் மற்றும் முட்டை உள்ளிட்ட பொருட்களால் ஒவ்வாமை உள்ளது.

சம்பவத்தன்று உயிருக்கு ஆபத்தான நிலையிலேயே சிறுவன் கரனை பாடசாலையில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

தொடர்ந்து 10 நாட்கள் சிகிச்சையில் இருந்த சிறுவன் பின்னர் மரணமடைந்துள்ளார். தற்போது ரினா தமது மகனின் கடைசி புகைப்படத்தை வெளியிட்டு எச்சரித்துள்ளார்.

ஒவ்வாமையை விளையாட்டாக யாரும் எடுத்துக் கொள்ள வேண்டாம் என கூறும் அவர், தமக்கு ஏற்பட்ட நிலை எந்த பெற்றோருக்கும் ஏற்பட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

சிறுவன் கரன், சம்பவத்தன்று சக மாணவன் ஒருவரால் சீஸ் துண்டை பயன்படுத்தி துன்புறுத்தப்பட்டுள்ளான்.

தமக்கு ஒவ்வாமை இருப்பதை சுட்டிக்காட்டிய பின்னரும், குறித்த மாணவன கரனை துரத்திச் சென்று அவனது ஆடைகளில் சீஸை வீசியுள்ளான்.

இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுவன் பாடசாலை ஊழியர்களிடம் தமது நிலைமை குறித்து தெரிவித்துள்ளான். இதனையடுத்து பாடசாலையில் சிறுவன் கரனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை அடுத்து பாடசாலை நிர்வாகம் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்துள்ளது, அடுத்த 7 நிமிடத்தில் மருத்துவர் ஒருவர் பாடசாலைக்கு சென்று பரிசோதித்துள்ளார்.

அப்போது சிறுவன் கரன் சுயநினைவை இழந்த நிலையில் இருந்துள்ளான். மட்டுமின்றி மாரடைப்பு ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

மேலும் மூச்சுத்திணறலும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுவனை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

தொடர்ந்து 10 நாட்கள் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்த சிறுவன் கரன் பெற்றோர் முன்னிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்